சர்வதேச திரைப்பட விருது வென்ற ஒற்றை பனைமரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, அப்படத்தின் இயக்குனர் புதியவன் ராசையாவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் இந்த இயக்குனருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஈழத்தில் நடந்த போரின் போது இறுதி நாட்களில் மக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் சந்தித்த பிரச்னைகள் மற்றும் சொல்ல முடியாத வலிகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள திரைப்படம் ஒற்றை பனைமரம். உண்மை சம்பத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தை புதியவன் ராசையா இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் பத்திரிக்கயைாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அப்போது இயக்குனர் புதியவன் ராசையாவிடம் சிலர், 2010-ம் ஆண்டு நடந்ததை இந்த படத்தில் காட்டியிருக்கிறீர்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்று காட்டவில்லையே என்று கேட்க, அனைத்தையும் ஒரே படத்தில் காட்ட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது ஏற்க முடியாதது. என்னுடைய அடுத்த படத்தில், நீங்கள் சொல்லக்கூடிய அந்த விஷயத்தை பார்க்கலாம்.
இதை கேட்ட சிலர் ஒரு படைப்பு என்பது முழுமையாக இருக்க வேண்டாமா என்று கேட்க, இதற்கு இயக்குனர் புதியவன் ராசையா பதில் அளிக்கும்போது இடையில் குறுக்கிடும் பயில்வான் ரங்கநாதன், அவர் என்ன கவிதை எழுத வேண்டும்? அதன்பிறகு என்ன நடந்துச்சு என்று தனது வாழ்க்கையில் நடந்தவற்றை எழுத வேண்டும். பயில்வானின் பேச்சை கேட்டு, பலரும் கூச்சலிட்ட நிலையில், அடுத்த அதிரடியாக நான் இந்த படத்திற்கு முழுமையாக ஆதரவு தருகிறேன் என்று பயில்வான் கூறுகிறார்.
மேலும், எங்க அப்பாவும், சித்தப்பாவும் நேரடியாக பாதிக்கப்பட்டதால் இந்த படத்திற்கு நான் ஆதரவு கொடுக்கிறேன். நான் எனது சொந்த வாழ்க்கையில் இந்த கஷ்டத்தை பார்த்திருக்கிறேன். உண்மையை சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? தமிழ்நாட்டில் விபச்சாரிகள் படம் வந்ததே இல்லையா? அரங்கேற்றம் என்ற படம் முழுக்க முழுக்க விபச்சாரியை பற்றிய படம் தான். அந்த சினிமாவுக்கு என்ன? அதில் பெட்ரூம் லைட் அணைந்தால் தான் ரெட் லைட் விழும் என்று சொல்லியிருப்பார்கள். அப்போதெல்லாம் நாம் ஒன்றுமே பண்ணவில்லையே என்று பயில்வான் கூறியுள்ளார்.
இதை கேட்ட பலரும் இங்கு இந்த படத்தை பற்றி மட்டும் தான் பேச வேண்டும். அரங்கேற்றம் பற்றியெல்லாம் இங்கு பேச கூடாது. இந்த படம் நியாயமான படம் என்று பயில்வான் சொல்ல, பத்திரிக்கயைாளர் ஒருவருக்கும் பயில்வானுக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்துள்ளது. அதன்பிறகு நீங்கள் புரட்சி ஜெயிக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அது அவருக்கு புரியவில்லை என்று பயில்வான் சொல்ல, பத்திரிக்கையாளர் சந்திப்பு பரபரபப்பான முடிந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“