நடிகர் விஜய் விதவிதமாக விக் பயன்படுத்தி படங்களில் நடித்து வருவதாக நடிகரும் பத்திரிக்கைளாருமான பயில்வான் ரங்கநாதன் விமர்சித்துள்ள நிலையில், அவரை விஜய் ரசிகர்கள் இணையத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
சினிமாவில் நடிகர் நடிகைகள் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறி வருபவர் பயில்வான் ரங்கநாதன். கவுண்டமணி வடிவேலு என முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து காமெடி நடிகராக வலம் வந்த பயில்வான் ரங்கநாதன், தற்போது திரைத்துறையில் உள்ள முன்னணி நடிகர் நடிகைகள் குறித்து பல சர்ச்சையான கருத்துக்களை கூறி வருகிறார்.
இதனால் கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டாலும் பயில்வான் தொடர்ந்து தனது நடிகர் நடிகைகள் குறித்து சர்ச்சை மற்றும் அந்தரங்கம் குறித்து பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஒரு சில நடிகர் நடிகைகள் வெளிப்படையாக அவரை விமர்சித்ததும், ஒரு சிலர் அவரை பொது இடங்களில் தாக்கிய நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது. நடிகை ராதிகா, ரேகா நாயர் உள்ளிட்ட பலரும் பயில்வானை பொதுஇடங்களில் வைத்து தாக்கியுள்ளனர்.
ஆனாலும் தொடர்ந்து தனது பேச்சு மூலம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் பயில்வான் தற்போது நடிகர் விஜயை சீண்டியுள்ளார். படங்களில் விஜய் விக் பயன்படுத்தி நடித்து வருவதாக சமீபத்திய வீடியோ பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவில், விஜய் 7 வருடங்களுக்கு மேலாக விக் பயன்படுத்தி வருகிறார். வயதானாலும் விஜய் தந்தைக்கு முடி இருக்கிறது. ஆனால் விஜய்க்கு முடி இல்லை. ரசாயணம் கலந்த ஷேம்பு பயன்படுத்தியதுதான் அவருக்கு முடி இல்லாததற்கு காரணம்.
உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் இதுபோன்று இருந்தது. ஆனால் அவர் சுதாரித்துக்கொண்டு வெளிநாட்டில் சிகிச்சை செய்து முடி வளர் வைத்துக்கொண்டார். ரஜினிக்கு முடி கொட்டிவிட்டது. ஆனால் அவர் அதை பற்றி கவலைப்படாமல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஆனால் விஜய் விக் வைத்துக்கொண்டுதான் வருகிறார். சினிமா பிரபலங்கள் விக் வைப்பது சாதாரண விஷயம் தான் என்றாலும் விஜய் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவர் பலவிதமாக விக்கை பயன்படுத்துகிறார். ஒரே விக்கை வைத்து பழகுங்கள் என்று கூறியுள்ளார். பயில்வானின் இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் பலரும் பயில்வானுக்கு எதிராக தங்களது கருத்துக்களை தெரிவித்து இணையத்தில் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும் தெறி படத்தின்போதே விஜய் முடிக்கு சிகிச்சை செய்து வளர்த்துக்கொண்தாகவும், விக்க்கும் முடிக்கும் வித்தியாசம் தெரியாதா என்று கேட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“