Cook With Comali Ashwin Speech : தமிழில் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய நெருங்கி வா முத்தமிடாதே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அஸ்வின். தொடர்ந்து ஓகே கண்மணி, என்னை நோக்கி பாயும் தோட்டா, ஆதித்ய வர்மா,ஓ மணப்பேண்ணே ஆகிய படங்களில் சிறுசிறு கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், ரெட்டை வால் குருவி, ராஜா ராணி, நினைக்க தெரிந்த மனமே உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
மேலும் ஏராளமாக ஷார்ட் ஃபிளிம் மற்றும் ஆல்பம் வீடியோக்களில் நடித்துள்ளார். சினிமா சீரியல் என மாறி மாறி நடித்து வந்தாலும் அஸ்வினை பிரபலப்படுத்தியது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். கடந்த 2020-ம் இறுதியில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியின் 2-வது சீசனில் பங்கேற்ற அஸ்வின் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியின் புகழ், மற்றும் சிவாங்கி இருவருடனும் இவர் செய்த ரகளை ரசிகர்களை இன்றளவும் ரசிக்க வைத்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நாயகனாகும் வாய்ப்பு கி்டைத்தது. என்ன சொல்ல போகிறார் என்ற படத்தில் இவர் தற்போது நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தேஜாஸ்வினி, அவந்திகா மிஸ்ரா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் புகழ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரொமான்டிக் காமெடி கதையில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது.
சமீபத்தில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அஸ்வின், இதுவரை 40 கதைகள் கேட்டிருக்கிறேன். இந்த கதைகளை கேட்கும்போது தூங்கிவிட்டேன். ஆனால் இந்த படத்தின் இயக்குநர் ஹரி கதை சொல்லும்போது தூங்கவில்லை. அதனால் தான் இந்த படத்தில் நடித்துள்ளேன். ஆனால் இந்த படம் நன்றாக இல்லை என்றால் வெளியிட விட மாட்டேன் என்று பேசினார்.
அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இவரது பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போது பல நிறுவசனங்கள் தன்கை நிராகரித்து விடடதாக அஸ்வின் கூறியது பரிதாபத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரின் இந்த பேச்சு ஆணவமாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து்ளளனர் மேலும் நிறைய இயக்குநர்கள் தங்களது கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள கதை சொல்ல வந்திருப்பார்கள். ஆனால் அவர்களின் கதையை கேட்காமல் தூங்கிவிட்டேன் என்று இவர் சொல்வது அவர்களை அவமதிக்கும் விதமாக உள்ளது என்று கூறி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil