ராஜா ராணி சீரியலில் இணைந்தாரா புகழ்? மாஸாக வெளியான ப்ரோமோ பாருங்க

Pughal Raja Rani Serial : ராஜா ராணி சீரியல் ப்ரோமோவில் குக் வித் கோமாளி புகழ் வந்து சென்றது அவர் சீரியலில் இணைந்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Pughal Raja Rani Serial : ராஜா ராணி சீரியல் ப்ரோமோவில் குக் வித் கோமாளி புகழ் வந்து சென்றது அவர் சீரியலில் இணைந்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
ராஜா ராணி சீரியலில் இணைந்தாரா புகழ்? மாஸாக வெளியான ப்ரோமோ பாருங்க

சீரியலுக்கு புகழ்பெற்ற விஜய்டிவியில், ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது ராஜா ராணி சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. சித்து மற்றும் ஆல்யா மானசா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியலில், அர்ச்சனா வில்லியாக நடித்து வருகிறார்.

Advertisment

இந்த சீரியலில், தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், அர்ச்சனா வீட்டில் எல்லா புகழும் சந்தியாவுக்கு (ஆல்யா மானசா) தான் கிடைக்கிறது, எனக்கு எப்போது புகழ் வந்து சேரும் என புலம்பிக்கொண்டிருக்கிறார். அங்கு ஒருவர் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறார். அதனை பார்க்கும் அர்ச்சனா, நான் இங்கு புலம்பிக்கொண்டிருக்கிறேன் நீங்கள் பேப்பர் படிக்கிறீகளாக என்று கேட்டு பேப்பரை கிழிக்கிறார். அந்த நேரத்தில் குக் வித் கோமாளி புகழ் அங்கு அமர்ந்திருக்கிறார்.

இதை பார்த்த புகழ் 'வா வந்து காமெடி பண்ணு. இங்க மட்டும் இல்ல, உலகம் முழுக்க புகழ் பரவும்' என சொல்லி காமெடி ஷோவுக்கு அழைத்து செல்கிறார். 'காமெடி ராஜா, கலக்கல் ராணி' என அந்த ஷோவுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். வரும் ஜூன் 27ம் தேதி முதல் ஞாயிறு தோறும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த ஷோவில், காமெடியன்களுடன் சேர்ந்து சீரியல் நட்சத்திரங்களும் பங்கேற்று காமெடி செய்ய இருக்கிறார்கள். இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cook With Comali Pughal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: