/indian-express-tamil/media/media_files/6sbtHKg00ETMGD3KWWTR.jpg)
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள லால் சலாம் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், படத்தின் டிரெய்லருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் முன்னாள் கணவரும் நடிகருமான தனுஷ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனுஷ் ஸ்ருதிஹாசன் இணைந்து இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அடுத்து, கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தை இயக்கியிருந்தார்.
அதன்பிறகு படங்களை இயக்காத ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது கணவர் தனுஷை விவாகரத்து செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு தமிழ் சினிமாவில், அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த பிரிவுக்கு பிறகு இருவருமே தங்களது பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதன்படி வை ராஜா வை படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ஆல்பம் பாடல் ஒன்றை இயக்கினார்.
அதனைத் தொடர்ந்து தற்போது 9 வருட இடைவெளிக்கு பிறகு லால் சலாம் என்ற படத்தை இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
லால் சலாம் படம் வரும் பிப்ரவரி 9-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்,ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் முன்னாள் கணவர் தனுஷ் 'லால் சலாம்' படத்தின் டிரெய்லருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Lal salaam trailer https://t.co/jUlBWLLtTX Best wishes to the team. God bless. #superstar#thalaivar
— Dhanush (@dhanushkraja) February 5, 2024
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில், "லால் சலாம் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்தின் ரசிகராக தனுஷ் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு பாராட்டு தெரிவித்திருப்பது, முன்னாள் தம்பதியினருக்கு இடையே உள்ள பரஸ்பர மரியாதையை விளக்குகிறது.
18 வருடங்கள் ஒன்றாக இருந்த பிறகு, தனுஷும் ஐஸ்வர்யாவும் 2022 இல் பிரிந்ததாக அறிவித்தனர், ஆனால் அவர்கள் தங்கள் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவைக் கருத்தில் கொண்டு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்கள் மகன்களுடன் தனித்தனியாக நேரத்தை செலவழித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.