இந்தியாவின் டாப் நடிகர்கள் பட்டியல் : முதலிடத்தை பிடித்த தனுஷ்

2022-ம் ஆண்டுக்கான ஐஎம்டிபி-யின் பிரபலமான இந்திய நடிகர்கள் பட்டியலில் தஷ் முதலிடம் பிடித்துள்ளார்.

2022-ம் ஆண்டுக்கான ஐஎம்டிபி-யின் பிரபலமான இந்திய நடிகர்கள் பட்டியலில் தஷ் முதலிடம் பிடித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியாவின் டாப் நடிகர்கள் பட்டியல் : முதலிடத்தை பிடித்த தனுஷ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் இந்திய அளவில் பிரபலமான நடிகர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

Advertisment

கடந்த 2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவாதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் தனுஷ். அப்பா கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் தான் நடித்த முதல் படமே வெற்றிப்படமாக அமைந்த சந்தோஷத்தில், அடுத்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல்கொண்டேன் படத்தில் நடிக்க, இந்த படமும் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு படமாக அமைந்து தனுஷின சினிமா வாழக்கையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தியது.

தொடர்ந்து திருடா திருடி, அது ஒரு கனாக்காலம், திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன் ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூலில் சாதனை படைத்தது. தனுஷ் தற்போது வாத்தி, கேப்டன் மில்லர் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே 2022-ம் ஆண்டுக்கான ஐஎம்டிபி-யின் பிரபலமான இந்திய நடிகர்கள் பட்டியலில் தஷ் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் 2-வது இடத்தையும், ஐஸ்வர்யா ராய் 3வது இடத்தையும், தெலுங்கு நடிகர் ராம்சரன் 4-வது இடத்தையும், சமந்தா 5-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

Advertisment
Advertisements

2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி இந்திய அளவில் பெரிய வசூல் சாதனை நிகழ்த்திய கே.ஜி.எஃப் படத்தின் நாயகன் யஷ் இந்த பட்டியலில் 10-வது இடத்தை பெற்றுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dhanush

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: