/indian-express-tamil/media/media_files/pUJ8pLCGJncxvab9ECVY.jpg)
ராயன் படத்தில் தனுஷ்
தனுஷ் நடித்து இயக்கி சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ராயன் திரைப்படம், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனா, தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து, பா.பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ராஜ்கிரண், ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய தனுஷ் அடுத்ததாக ராயன் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். அவரின் 50-வது படமான இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷூடன், வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், அபர்னா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
It’s Raayan trailer day pic.twitter.com/2fHpO0tEvm
— Dhanush (@dhanushkraja) July 16, 2024
சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என்று கடந்த சில மாதங்களாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது படம் ஜூலை 26-ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டிரெய்லர் இன்று (ஜூலை 16) வெளியாகும் என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது ராயன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. வழக்கம்போல் அதிரடி ஆக்ஷனுடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், ராயன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.