Advertisment
Presenting Partner
Desktop GIF

விலை உயர்ந்த பைக்கில் தனுஷ் மகன் ரைடு... லைசன்ஸ் இல்லாமல் இப்படி செய்யலாமா? நெட்டிசன்கள் கேள்வி

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு யாத்ரா லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் பிரிந்தனர்.

author-image
WebDesk
New Update
Dhanush Sons

தனது மகன்களுடன் தனுஷ்

தனுஷின் மகன் ஆர்15 பைக் ஓட்டும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். மேலும் லைசன்ஸ் இல்லாமல் பைக் ஓட்டுவது குற்றம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது தனுஷ் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. அதேபோல் 3 என்ற படத்தின் மூலம் தனுஷை இயக்கி இயக்குனராக அறிமுகமான அவரது மனைவி ஐஸ்வர்யா தொடர்ந்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கியிருந்தார். தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு யாத்ரா லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இதனிடையே சமீபத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி தங்கள் பிரிவதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் இருவரும் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர். பிரிவுக்கு பின் போயஸ் கார்டனில் புதிய வீடு கட்டி குடியேறியதனுஷ், போயஸ் கார்டனில் உள்ள தனது குழந்தைகளை அவ்வப்போது சந்தித்து வருகிறார். அதேபோல் பிள்ளைகள் இருவரும் தாய் தந்தை இருவருடனும் நேரத்தை கழித்து வருகிறது.

Dhanush Son Bike.

இதனிடையே தற்போது தனுஷுன் மூத்த மகன் யாத்ரா ஆர்15 பைக் ஓட்டும் வீடியோ காட்சி இணயைத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவில் அவர் பைக் ஓட்ட அவருக்கு உதவியாளராக ஒருவர் சொல்லிக்கொடுக்கிறார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் போட்டோ வீடியோ எடுக்க, அந்த உதவியாளர் யாரும் போட்டோ வீடியோ எடுக்க வேண்டாம் என்று கூறி வருகிறார்.

ஆனாலும் பொதுமக்கள் எடுத்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவருக்கு இன்னும் 18 வயதே ஆகவில்லை. அதற்குள் பைக் ஓட்ட பழகுவது தவறானது. அதுவும் ஆர்15 பைக் ஓட்டுவது மிகவும் தவறு. அப்படி அவர் ஓட்டி பழக வேண்டும் என்றால் பாதுகாப்பான இடத்தில் தான் ஓட்ட வேண்டும். ஆனால் லைசன்ஸ் இல்லாமல் பைக் ஓட்ட பழக்குவது குற்றம் என்றும், இதை தனுஷ் தனது மகனுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment