தியேட்டரில் வசூல் வேட்டை: லப்பர் பந்து ஒ.டி.டி ரிலீஸ் எப்போது? முக்கிய தகவல்!

தியேட்டரில் வசூல் மழை பொழிந்து பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்த லப்பர் பந்து திரைப்படம் ஒடிடி தளததில் வெளியாக உள்ளது.

தியேட்டரில் வசூல் மழை பொழிந்து பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்த லப்பர் பந்து திரைப்படம் ஒடிடி தளததில் வெளியாக உள்ளது.

author-image
WebDesk
New Update
Lubber Panthu Ott

சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த லப்பர் பந்து திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் தேதி தற்போத அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகின்றது.

Advertisment

அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள படம் லப்பர் பந்து. கனா, எப்.ஐ.ஆர் போன்ற படங்களில் உதவி இயக்குனராகவும், நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதியவருமான தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படம் கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.  ஷான் ரோல்டன் இசையமைத்த இந்த படத்தை பிரின்ஸ் பிச்சர்ஸ் தயாரித்துள்ளது.

ரிலீஸ்க்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த லப்பர் பந்து திரைப்படம், கடந்த செப்டம்பர் 20-ந் தேதி வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர். குறிப்பாக, அட்டகத்தி தினேஷ், நாயகியின் அப்பா கெத்து என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளதாக பலரும் பாராட்டினர்.

தமிழ் சினிமாவில் முதல்முறையாக, லப்பர் பந்து படத்தில், ஹீரோ அட்டக்கத்தி தினேஷ், கேப்டன் விஜயகாந்தின் தீவிர ரசிகராக நடித்துள்ளார். இந்த படத்தில் பல விஜயகாந்த் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பொன்மனச்செல்வன் படத்தில் இடம் பெற்ற ‘’நீ பொட்டு வச்ச தங்கக்குடம்’’ என்ற பாடல், பெரிய புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு பாடலாக உள்ளது. அதேபோல், ஹரிஷ் கல்யாணுக்கு இந்த படம் ஒரு பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

Advertisment
Advertisements

அதேபோல் அட்டக்கத்தி படத்தின் மூலம் பிரபலமாகி அட்டக்கத்தி தினேஷ் என்று அழைக்கப்பட்ட நடிகர் தினேஷ் இந்த படத்தில் இருந்து கெத்து தினேஷ் என்ற பெயர் மாற்றம் ஆகியுள்ளார். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த லப்பர் பந்து திரைப்படம் வரும் அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டரில் இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தியேட்டரில் வசூல் வேட்டை நடத்திய லப்பர் பந்து ஒடிடி தளத்திலும் அதகளம் செய்யும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: