தமிழ் சின்னத்திரையில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள சீரியலில் நடிகரும் பட்டிமன்ற நடுவருமான ஞானசம்மந்தம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரைப்படங்களை விட தற்போது சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் பல டிவி சேனல்கள் அவ்வப்போது பல புதிய சீரியல்களை களமிறக்கி வருகின்றன. அதோடு மட்டுமல்லாமல் அறிமுக நடிகர் நடிகைகளுடன் சேர்ந்து அனுபவமிக்க ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பலரையும் சீரியலுக்கு அழைத்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது புதிதாக களமிறங்கியுள்ளவர் நடிகரும் பட்டிமன்ற நடுவருமான ஞானசம்பந்தம். தமிழ் பேராசிரியர், நகைச்சுவை பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், என பன்முறை திறமைகளுடன் வலம் வரும் ஞானசம்பந்தம் விருமாண்டி படத்தில் ஜல்லிக்கட்டு போட்டியின் பேச்சாளராக சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இதய திருடன், சிவா மனசில சக்தி, கொம்பன், போராளி, நிமிர்ந்து நில் உள்ளிட்ட 30-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்த ஞானசம்பந்தம், செம்பி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இதனிடையே ஞானசம்பந்தம் தற்போது சன்டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள ஆனந்தி என்ற சீரியல்ல முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காமெடிக்கு பெயர் பெற்ற ஞானசம்பந்தம் ஏற்கனவே சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“