பல மாதம் தாங்க முடியாத வலி: சீரியல் முடிவுக்கு காரணம் இதுதான்; நடிகர் ஜெய் ஆகாஷ் உருக்கம்!

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் திடீர் முடிவுக்கு நான் தான் காரணம், எனக்கு ஆப்ரேஷன் நடக்க உள்ளது என்று நடிகர் ஜெய் ஆகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் திடீர் முடிவுக்கு நான் தான் காரணம், எனக்கு ஆப்ரேஷன் நடக்க உள்ளது என்று நடிகர் ஜெய் ஆகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Nenjathai Killa

ஜீ தமிழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென நேற்று முடிவுக்கு வந்த நிலையில், ஏன் இந்த முடிவு என்பது குறித்து சீரியலின் நாயகன், ஜெய்ஆகாஷ் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

Advertisment

ஜீ தமிழில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்து வந்த இந்த சீரியலில் ரேஷ்மா முரளிதரன் நாயகியாக நடித்து வந்தனர். நடிகை கௌதமி கெஸ்ட் ரோலில் நடித்த இந்த சீரியல், விரும்பி நடக்காத திருமணத்தால் இணைந்த ஒரு ஜோடியில் வாழ்க்கையில் நடக்கும், முக்கிய பிரச்னைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது. பல திருப்பங்களுடன் ஒளிபரப்பான இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல், நேற்று (ஜனவரி 17) திடீரென முடிவுக்கு வந்தது. இந்த முடிவு ரசிகர்கள் மட்டுமல்லாமல் அந்த சீரியலில் நடித்து வந்த நாயகி ரேஷ்மி முரளிதரனுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஒன் லாஸ்ட் டைம், நல்ல பண்ணிட்டீங்க, உண்மை கண்டிப்பா வெளியில் வரும், நமக்கு மட்டும் ஏன் இப்படி என்று பதிவிட்டு, ஜீ தமிழ், நடிகர் ஜெய் ஆகாஷ், தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

இதனிடையே தற்போது சீரியல் விரைவாக முடிக்கப்பட்டதற்கு காரணம் என்ன என்பது குறித்து ஜெய் ஆகாஷ் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து எல்லோரும் பல்வேறு வதந்திகள் பரப்பி வருகிறார்கள் அது உண்மை இல்லை. உண்மையான காரணம் என்னுடைய உடல்நிலை தான். என்னை இன்ஸ்டாகிராமில் பாலோ பண்ணுபவர்களுக்கு என்னுடைய உடல்நிலை தெரிந்து இருக்கும்.

Advertisment
Advertisements

சீரியல் தொடங்குவதற்கு முன்பே எனக்கு ஏற்பட்ட விபத்தில் காலில் அடிபட்டு இருந்தது. அதற்கு மேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் குறிப்பிட்ட நாளில் சீரியல் தொடங்க வேண்டும் என்பதற்காக நான் ஆபரேஷன் செய்யாமல் அந்த வலியோடு தான் சீரியலில் நடிக்க தொடங்கினேன். அதுவும் முதலிலேயே ஞாயிற்று கிழமை எபிசோடு தொடர்ந்து ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக வேண்டும் என்பதற்காக ஒரு நாள் முழுக்க சூட்டிங் நடந்தது.

அப்போது கதாநாயகி ரேஷ்மாவை தூக்கிக் கொண்டு நான் ஓடுவது போன்ற காட்சிகள் இருந்தது. அந்த காட்சிகளை எடுத்து முடித்ததும் எனக்கு கால் வலி அதிகமாகிவிட்டது. ஆனால் அதை அட்ஜஸ்ட் பண்ணி கொண்டு இருந்தேன். பிறகு டிசம்பர் மாதத்தில் லண்டனுக்கு என்னுடைய குடும்பத்தை பார்க்க போயிருந்த போது என்னுடைய உடல் நிலையை பார்த்து என்னுடைய மனைவி கண்டிப்பாக ஆபரேஷன் செய்து ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

ஆபரேஷன் செய்தால் குறைந்த பட்சம் இரண்டு மாதங்கள் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனாலும் நான் வேறு ஏதாவது செய்யலாமா என்று முயற்சி எடுத்தேன். ஆனால் இது இப்போதைக்கு ஆபரேஷன் செய்யாமல் போனால் இது பெரிய பிரச்சனையாகிவிடும் என்பதால் நான் ஆபரேஷன் செய்து கொண்டேன் ஒரு வாரம் நான் சீரியலில் இல்லை என்பதால் கதாநாயகன் இல்லாமல் கதை நல்லா இல்லை என்பது பலருடைய கருத்தாக இருந்தது. சேனல் தரப்பினரும் அதை விரும்பவில்லை. வேறு வழியில்லாமல் தான் சீரியலை முடிக்கிறோம்.

எனக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை வைத்து நடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன் ஆனாலும் அவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் தான் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறது. அதே நேரத்தில் என்னுடைய உடல்நிலை சரியானதும் மீண்டும் ஒரு சீரியலில் நான் கண்டிப்பாக நடிக்க வருவேன். அதுபோல சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். அது குறித்த அப்டேட் சீக்கிரமாக தருகிறேன் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: