Advertisment

ரூ150 கோடி சம்பளம் பேசுவதாக தகவல்: பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன்?

சயின்ஸ் பிக்ஷன் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

author-image
WebDesk
New Update
Kamal Prabhas

கமல்ஹாசன் - பிரபாஸ்

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லனாக நடிக்க உலக நாயகன் கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதற்காக அவருக்கு 150 கோடி சம்பளம் பேசப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 படத்தின் மூலம் இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகராக உயர்ந்த பிரபாஸ் அதன்பிறகு நடித்த படங்கள் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. தற்போது கே.ஜி.எஃப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தை முடித்துள்ள பிரபாஸ் நடிப்பில் அடுத்து அதிபுருஷ் படம் வரும் ஜூன் 16-ந் தேதி வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது பிரபாஸ் தெலுங்கில் தயாராகி வரும் ப்ராஜெக்ட் கே என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வரும் இந்த படம் இந்திய அளவில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடித்து வரும் நிலையில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இதனிடையே இந்த படத்தில் வில்லனாக நடிக்க உலகநாயகன் கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்க 20 நாட்கள் கால்ஷீட்க்கு ரூ150 கோடி சம்பளம் பேசப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வைஜெயந்தி மூவிஸ் தற்போது 50வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையடுத்து, பொன்விழா ஆண்டு படைப்பாக பிரம்மாண்டமான இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

சயின்ஸ் பிக்ஷன் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பொங்கல் தினத்தை முன்னிட்டு அடுத்து ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி உலகளவில் ப்ராஜெக்ட் கே திரைப்படம் வெளியாககும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். இந்திய அளவில் இதுவரை வெளியான சயின்ஸ் பிக்ஷன் படங்களுக்கு சவால் கொடுக்கும்வகையில் பிராஜெக்ட் கே அமையும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Kamal Haasan Prabhas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment