Advertisment

கனத்த இதயத்தோடு சொல்கிறேன்: பை பை பிக்பாஸ்; கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு!

7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த பயணத்தில் சிறிய இடைவெளி எடுத்துக்கொள்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

author-image
WebDesk
New Update
Biggboss Grand

பிக்பாஸ் கமல்ஹாசன்

 விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தற்போது இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Advertisment

ரியாலிட்டி ஷோவுக்கு பெயர் பெற்ற விஜய் டிவியில், கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 100 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், சின்னத்திரை மற்றும் சமூகவலைதளங்களில் பிரபலங்களாக இருக்கும் நபர்களை போட்டியளர்களாக தேர்வு செய்து பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்புவார்கள். இவர்கள் பிக்பாஸ் வீட்டில் தங்களது ரியல் கேரக்டர்களை தக்கவைத்துக்கொள்ள எதிர்கொள்ளும் சவால்களே இந்நிகழ்ச்சி. 

மேலும் பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த டாஸ்க் மற்றும் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை பொறுத்து, ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார். இறுதியாக வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களில் சாம்பியன் யார் என்பதை தொகுப்பாளர் அறிவிப்பார். பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் முடிந்துள்ளது. 

இந்த 7 சீசன்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன். நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொகுத்து வழங்கி வந்த இவர், பிக்பாஸ் வீட்டில் கொடுக்கும் ஸ்பீச், மற்றும் குட்டி கதைகள், அறிவுரைகள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கடந்த இரு சீசன்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக ஒரு வாரம் மட்டும் நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

இதனிடையே தற்போது நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த பயணத்தில் சிறிய இடைவெளி எடுத்துக்கொள்கிறேன் என்பதை கணத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். சினிமா கமிட்மெண்ட்ஸ் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்து வரும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை.

உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் என்னிடம் பொழிந்திருக்கிறீர்கள், அதற்காக உங்களுக்கு என்றும் என் நன்றியுணர்வு இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்தியாவின் சிறந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக மாற்றுவதற்கு போட்டியாளர்களின் உங்களின் உற்சாகமான மற்றும் உணர்ச்சிமிக்க ஆதரவே அடிப்படையாக இருக்கிறது.

தனிப்பட்ட முறையில், உங்கள் புரவலராக இருப்பது ஒரு சிறந்த சங்கமாக இருந்து வருகிறது. இந்த மகிழ்ச்சியான அனுபவத்திற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். என்னுடன் ஒன்றாக நேரம் செலவழித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Bigg Boss Tamil Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment