scorecardresearch

தங்க நகை எப்படி அக்காவுக்கு கொடுக்க முடியும்… பிரியங்காவை கலாய்த்த கமல்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கமல்ஹாசன், பல்வேறு நிகழ்வுகள் மற்றும் தனக்கு தெரிந்த பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி வருகிறார்.

தங்க நகை எப்படி அக்காவுக்கு கொடுக்க முடியும்… பிரியங்காவை கலாய்த்த கமல்

Tamil Actor Kamal Hassan IN Super Singer Show : தமிழ் சினிமாவின் மன்னணி நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு விஸ்வரூபம் 2 படம் வெளியானது. அதன்பிறகு அரசியல் கட்சி தொடங்கிய அவர், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்தித்தார்.

தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் கமல்ஹாசன், கைதி மாஸ்டர் என பெரய வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 3-ந் தேதி வெளியாக உள்ளது.

சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடிப்பில் வெளியாகும் இந்த படம் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது பல கோலிவுட் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் விக்ரம் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், அவ்வப்போது மீடியாவை சந்தித்து வருகிறார்.

இந்த ப்ரமோஷனின் ஒரு பகுதியாக விஜய்டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கமல்ஹாசன், பல்வேறு நிகழ்வுகள் மற்றும் தனக்கு தெரிந்த பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி வருகிறார்.

இந்நிலையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளினி பிரியங்கா, தான் செய்த ஒரு செயலை கூறி இதற்கு தனக்கு தங்க நகை கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கைகொடுத்து அனுப்பிவிட்டார்கள் என்று சொல்ல உடனே கமல்ஹாசன் தங்க நகையை எப்படி அக்காவுக்கு போட முடியும் என்று கலாய்த்தவிட்டார்.

இதை கேட்டு அனைவரும் சிரிக்க, பிரியங்கா ஷாக்காகிவிட்டார். இந்த வீடியோவை விஜய் டிவியே கட் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிரியங்காவை கலாய்த்து இருக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actor kamalhaasan troll vijay tv vj priyanka in super singer show