Advertisment

அடடா மழைடா... மேடையில் தமன்னா- கார்த்தி கியூட் டான்ஸ்

கார்த்தி - தமன்னா கூட்டணியில் வெளியான 3 படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கார்த்தி தமன்னா இருவருக்கும் பாராட்டுக்களை பெற்று கொடுத்தது.

author-image
WebDesk
New Update
Karthi 25 Thamannah

கார்த்தி - தமன்னா

கார்த்தி நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள ஜப்பான் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், கார்த்தி 25 நிகழ்ச்சியில் தமன்னா – கார்த்தி இருவரும் இணைந்து நடனமாடிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தவர்கள் கார்த்தி – தமன்னா ஜோடி. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான பையா படத்தின் மூலம் இணைந்த இந்த நட்சத்திர ஜோடி, அடுத்து சிறுத்தை, மற்றும் தோழா ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இந்த 3 படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கார்த்தி தமன்னா இருவருக்கும் பாராட்டுக்களை பெற்று கொடுத்தது.

அதேபோல் இவர்களை முதலில் இணைந்த இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான பையா படம் தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக அமைந்தது. பெங்களூருவில் இருந்து சாலை வழியாக மும்பை செல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் பாடல்கள் இன்றும் பலரின் வரவேற்பை பெற்று வருகிறது.

இதனிடையே கார்த்தி தற்போது நடித்துள்ள ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா கார்த்தி 25 என்ற விழாவாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் கார்த்தி நடிப்பில் வெளியான படங்களின் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் நடிகைகள் என பலரையும் அழைத்து கவுதவித்தனர். அந்த வகையில் இந்த விழாவில் கலந்துகொண்ட தமன்னாவுடன் அடடா மழைடா என்ற பாடலுக்கு கார்த்தி இணைந்து நடனமாடினார்.

இந்த நடனம் முடிந்தவுடன் பேசிய தமன்னா, கார்த்தி தான் தனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தாக கூறினார். தொடர்ந்து பையா தனது திரை வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படம் என்றும், இந்த படத்தை கொடுத்த இயக்குனர் லிங்குசாமி, தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார். கார்த்தி நடிப்பில் வரும் ஜப்பான் உட்பட இனி வரும் படங்கள் அவருக்கு வெற்றிப்படங்களாக அமையும் என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment