கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து ராமநாதபுரத்தில் நடிகர் கருணாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,
கடந்த 10 ஆண்டுகளில் மக்களிடம் இருந்து வருமான வரியை வசூல் செய்யும் பா.ஜனதா அரசு சென்னை, தென்மாவட்டங்களில் வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதி தர மறுக்கிறது. குஜராத், உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால் தமிழகத்திற்கு 29 பைசா என்ற அளவில்தான் நிதி வழங்குகிறார்கள். தாய் மொழி தமிழை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்.
கோவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் மாநில உரிமையை மீட்டு நாட்டை காப்பாற்ற முடியும். அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டும். அண்ணாமலைக்கு இந்திக்காரர்கள் தான் வாக்கு சேகரிக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி மண்ணுக்கும், சமூகத்துக்கும் துரோகம் செய்தவர். சசிகலா தவறு செய்தாலும் தட்டிக்கேட்பேன்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற கோவை ஜி.எஸ்.டி. வரியால் தொழில் நலிவடைந்து உள்ளது. நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். வருங்கால சந்ததிகளை காப்பாற்ற பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும் என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“