Advertisment

மகனுக்காக உதவி கேட்ட அம்மா... எதிர்பாராமல் பாலா செய்த செயல் : விஜயகாந்த் நினைவிடத்தில் சுவாரஸ்யம்

தற்போதுவரை தான் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து தன்னிடம் உதவி கேட்கும் பலருக்கும் உதவிகளை செய்து வரும் பாலா பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
KPY Bala In Vijayakanth Memorial

விஜயகாந்த் நினைவிடத்தில் கே.பி.ஒய். பாலா

ஏழை மக்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகள் செய்து வரும் கே.பி.ஒய். பாலா, கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் தனது மகனின் படிப்புக்காக, உதவி கேட்ட ஒரு பெண்ணுக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் உதவி செய்து பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. இந்த நிகழ்ச்சிக்கு பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர், விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் இருந்து வருகிறார். இதன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பாலா, சமீப காலமாக தனது சமூக செயல்பாடுகளின் மூலம் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய பாலா, சென்னையில் வெள்ளம் வந்தபோது, தான் தங்கியிருந்த பகுதிக்கு சென்று அனைவருக்கும் தன்னால் முடிந்த பண உதவிகளை செய்து வந்தார். மேலும், தற்போதுவரை தான் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து தன்னிடம் உதவி கேட்கும் பலருக்கும் உதவிகளை செய்து வரும் பாலா, தன்னால் முடிவில்லை என்றால், தனக்கு தெரிந்தவர்களை தொடர்புகொண்டு தன்னிடம் உதவி கேட்டவர்களுக்கு அந்த உதவி கிடைக்க வழி செய்து வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் புரட்சி கலைஞர் விருது பெற்ற பாலா, அந்த விருதை எடுத்துக்கொண்டு கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு பெண் தனது மகனின், படிப்பு செலவுக்கு பணம் இல்லை என்று சொல்ல, உடனடியாக பாலா தனது கையில் இருந்த பணம் முழுவதையும் அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் கண்ணீர்மல்க பாலாவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பாலாவின் செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். பாலா செய்து வரும் உதவிகளை பார்த்து அவர் காதலித்த பெண்ணே அவரை விட்டு விலகிவிட்டதாக கூறப்படும் நிலையில், மக்களுக்கு சேவை செய்வதில் தனது ஆர்வத்தை காட்டி வரும் பாலா, தற்போது நடிகர் ராகவா லாரஸ்சுடன் இணைந்து மாற்றம் என்ற சேவையை செய்து வருகிறார். பாலாவின் இந்த குணம் பலரின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

KPY Bala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment