Advertisment
Presenting Partner
Desktop GIF

பிரபல நடிகரின் மகள்... சன் டி.வி சீரியலின் முன்னணி நடிகை : இவரை யார்னு கண்டுபிடிங்க!

சன் டி.வியின் பிரபல சீரியில் நடிகை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த ஒருவரின் மகள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளது.

author-image
WebDesk
New Update
Jovitha Livingston Glamour

பிரபல சீரியல் நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

முன்னாள் நடிகரும், திரைக்கதை எழுத்தாளருமான லிவிங்ஸ்டனின் மூத்த மகளான ஜோவிதா லிவிங்ஸ்டன் ஜோன்ஸ், தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

2020-ம் ஆண்டில் சன் டி.வி சீரியல் பூவே உனக்காக மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஜோவிதா லிவிங்ஸ்டன், அந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரது நடிப்பு பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பரவலான பாராட்டைப் பெற்றது. பின்னர் அந்த சீரியலில் இருந்து விலகிய அவர், தற்போது 2021-ம் ஆண்டு முதல், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் அவருடன் பழம்பெரும் நடிகை அம்பிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விரைவில் ஜோவிகா லிவிங்ஸ்டன் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஜோவிதா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் ஒரு புகைப்படத்தில், நடிகை ஒரு பழுப்பு நிற உடையை அணிந்து, சில முக்கிய பேஷன் போஸ் கொடுத்துள்ளார். அலை அலையான ஆடைகளுடன் இயற்கையான தோற்றத்தைத் வெளிப்படுத்தியுள்ள இவர், பசுமையான பின்னணியில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

இதில் ஒரு ரசிகர்"விண்மீன் திரள்களுக்கு அப்பால் அழகாக இருக்கிறீர்கள் என்றும், மற்றொரு ரசிகர், "என் அழகு ராணி" என்றும் "நீங்கள் அழகில் பிரமிக்க வைக்கிறீர்கள்" என்றும் பதிவிட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஜோவிதா கடற்கரையில் போஸ் கொடுத்து வெளியிட்ட அழகான புகைப்படங்கள் கவனம் ஈர்த்தது. இந்த புகைப்படங்களில், அவர் மலர் அச்சிடப்பட்ட கோ-செட் உடையை அணிந்திருந்தார்.

மெல்லிய நெக்பீஸ் மற்றும் பட்டாம்பூச்சி காதணிகளுடன் உடை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். மேற்கத்திய ஆடைகளை அணிவது முதல் பாரம்பரிய உடைகளை அணிவது வரை, ஜோவிதா எப்போதும் தனது புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, காட்டன் பர்ப்பிள் கலர் புடவையில் அவர் எடுத்த படங்கள் சில காலத்திற்கு முன்பு கவனத்தை ஈர்த்தன.

அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், தனது ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jovitha Livingston
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment