எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்த நடிகர் மாரிமுத்து சமீபத்தில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவருக்கு சிலைவைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கடந்த 1966-ம் ஆண்டு தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் பிறந்தவர் ஜி. மாரிமுத்து. சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்த அவருக்குசினிமாவில் அவருக்கு சரியாக வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஹோட்டலில் சர்வராக பணியாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து இலக்கியத்தின் மீது உண்டாக ஆர்வம் காரணமாக கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக சேர்ந்துள்ளார்.
தொடர்ந்து, ராஜ்கரனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து சினிமாவை கற்றுக்கொண்ட மாரிமுத்து கடந்த 1994-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஆசை படத்தில் இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதன்பிறகு 2008-ம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரிமுத்து 2014-ம் ஆண்டு வெளியான புலிவால் படத்தையும் இயக்கி இருந்தார்.
இந்த இரு படங்களுமே அவருக்கு வெற்றியை கொடுக்காத நிலையில், யுத்தம் செய்த படத்தின் மூலம் குணச்சித்திர நடிராக மாறிய மாரிமுத்து, உதயா, பரியேறும் பெருமாள், கொம்பன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்த மாரிமுத்து கமல்ஹாசனின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
/indian-express-tamil/media/media_files/bLqs1nz9YQuJHXF9mA50.jpg)
சின்னத்திரையில், எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார். பெரிய திரையில் கிடைக்காத வரவேற்பு அவருக்கு சின்னத்திரையில் கிடைத்தது என்று சொல்லலாம். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து புகழ்பெற்ற மாரிமுத்து கடந்த செப்டம்பர் மாதம் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது மரணம் சினிமாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரையுலகில் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே விழுப்புரத்தில் பாஜகவினர் நடிகர் மாரிமுத்துவுக்கு சிலை வைத்துள்ளனர். எதிர்நீச்சல் கெட்டப்பில் வேட்டி சட்டையுடன் இருக்கும் மாரிமுத்துவின் சிலைக்கு அருகில், சமீபத்தில் இறந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீரோபென் மோடிக்கும் சிலை வைத்துள்ளனர். நடிகர் மாரிமுத்து மற்றும் பிரதமர் மோடியின் தாயார் ஆகிய இருவருக்கும் ஒரே இடத்தில் சிலை வைத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“