/indian-express-tamil/media/media_files/2025/09/19/kpy-bala-muthu-2025-09-19-10-51-00.jpg)
சின்னத்திரையில் காமெடியானராக இருந்து சினிமாவில் நடித்த கே.பி.ஒய்.பாலா தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ள நிலையில், அவர் செய்யும் உதவிகளை பார்த்து பலரும் அவர் சர்வதேச கைக்கூலி, என்று கூறி வருகின்றனர். இந்த தகவல்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் மதுரை முடித்து இதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கே.பி.ஒய்.பாலா, தொடர்ந்த பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று அசத்திய இவர், வஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த படம் ஓரளவு வெற்றியை பெற்ற நிலையில், அடுத்து புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகராக நடித்திருந்தார், சமீபத்தில் வெளியான காந்தி கண்ணாடி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே நலிவடைந்த மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் பாலா, தற்போது இலவச மருத்துவமனை ஒன்றை கட்டி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த உதவிகள், மருத்துவமனை கட்ட இவருக்க எங்கிருந்து பணம் வருகிறது? இவர் ஒரு சர்வதேச கைகூலி, இவரால் நாட்டுக்கே ஆபத்து என்று பலரும் கூறி வருகின்றனர். இதனால் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், இது குறித்து நடிகர் மதுரை முத்து தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
சிட்டி ஃபாக்ஸ் மீடியா யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ஒருவர் மக்களுக்க உதவி செய்தால், பரவாயில்லை என்று யாரும் பாராட்ட வரமாட்டார்கள். கேப்டன் இருக்கும்போது அவரை பற்றி வன்மமான நிறைய பேசினார்கள். ஆனால் இப்போது இவர் இல்லை அவர் இறந்து 2 மாதத்தில் கோவில் கட்டுக்கிறார்கள். இறந்த பின்பு அவரை புகழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு இது ஒரு சாபக்கேடு மாதிரி ஆகிவிடடது. அதுபோலத்தான் இப்போது பாலா. கடந்த 10 வருடமாக நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
அதிகாலை 3 மணிவரை ஸ்கிரிப்ட் எழுதிவிட்டு அப்படியே படுத்துவிடுவான். விட்டுக்கொடுக்கும் மனிதன், அவனை கூட இருந்து பார்த்தவன். இப்போது அவர் செய்யும் உதவிகளை எதற்காக வீடியோ எடுத்து போடுகிறார் என்று கேட்கிறார்கள். எம்.ஜி.ஆர் உதவி செய்யும்போத பப்ளிசிட்டிக்காக செய்கிறார் என்று சொனனார்கள். அப்போது சோ பப்ளிசிட்டிக்காகவாது ஒருர் செய்கிறாரே அதை நினைத்து சந்தோஷப்படுங்கள் என்று சொன்னார். வர்தா புயல் வந்தபோத ஒற்றை பிஸ்கட் பாக்கெட் கொடுத்துவிட்டு 10 போட்டோ எடுத்து போட்டார்கள். நான் நேரடியாக பார்த்தவரை பாலா ரொம்ப எளிமையான பையன்.
அவர் பின்னால் பெரிய ஆட்கள் இருக்கிறர்கள் என்றால்அவர் எதற்காக ஈவண்ட் போக வேண்டும்? அவர் ஷோவுக்கு சென்ற பணத்தை வைத்து தான் உதவி செய்து வருகிறார். கூல் சுரேஷ் கோமணத்தை கட்டிக்கொண்டு தியேட்டருக்கு வருகிறார். ஆனால இவர் அடுத்தவர்களை குறை சொல்கிறார். உதவி செய்ய தன்னையே அர்பணித்த ஒரு மனிதன் தான் பாலா. கோடி கோடியாக அடிக்கிற மந்திரிகள் பற்றி இப்படி பேச முடியுமா? ஏன்னென்றால் அவர்கள் பதிலடி கொடுப்பார்கள். பாலாவால் பதிலடி கொடுக்க முடியாது என்று இப்படி செய்கிறார்கள்.
ஆண்மை இருக்கும் ஆட்களாக இருந்தால் அமைச்சர்கள் பற்றி பேசுங்கள் என்ற கூறியுள்ள மதுரை முத்து, இப்படி உதவிகள் செய்தால் பாலாவுக்கு என்ன கிடைக்கப்போகிறது? இவ்வளவு உள்நோக்கமாக இவரை ஏன் அட்டாக் செய்கிறார்கள் என்ற எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.