நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் மிர்ச்சி செந்தில் தற்போது சீரியல் நடிகைகளை திருமணம் செய்துகொள்ள கூடாது என்று கூறியுள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியின் மதுர சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி ஆனவர் மிர்ச்சி செந்தில்.மிர்ச்சி எப்எம்.மில் ஆர்ஜேவாக இருந்து சின்னத்திரைக்கு வந்த இவர், கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், சரவணன் மீனாட்சி சீசன் 1, நாம் இருவர் நமக்கு இருவர், உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் நடித்த சரவணன் மீனாட்சி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சின்னத்திரையில் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் தொடங்கியதற்கு காரணமான அமைந்தது.
மேலும் இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ஸ்ரீஜா சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சமீப காலமாக சீரியலில் ஒன்றாக நடிப்பவர்கள் திருமணம் செய்துகொள்ளும் படலாம் தொடங்கியுள்ள நிலையில், இதற்கு ஆரம்ப புள்ளி மிர்ச்சி செந்தில் – ஸ்ரீஜா ஜோடி தான் என்று சொல்லலாம். இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்சியாக சென்றுகொண்டிருக்கிறது.
இதனிடையே சீரியல் நடிகைகளை திருமணம் செய்துகொள்ள கூடாது என்று மிர்ச்சி செந்தில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 8 மாதமாக காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட சிற்பிக்குள் முத்து காதல் ஜோடி சம்யுக்தா – விஷ்ணுகாந்த் இருவரும் சமீபத்தில் பிரிந்த நிலையில், சமூக வலைதளங்களில் இருவரும் மாறி மாறி தங்களது அந்தரங்க விஷயங்கள் குறித்து பேசி வருகின்றனர்.
இவர்களின் பேட்டிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசியுள்ள மிர்ச்சி செந்தில், பொதுவா சீரியலில் ஒரு கேரகட்டரில் நடிக்கும்போது அதேபோல் தான் அவர் நிஜ கேரக்டரும் இருக்கும் என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் கூட நடிப்பவர்களும் நினைக்கிறார்கள். சீரியலில் நல்லவர்களாக இருந்தால் நிஜத்திலும் அப்படியேதான் இருப்பார்கள் என்று நினைத்து காதல் வந்துவிடுகிறது.
அந்த காதல் திருமணத்தில் முடிந்த பிறகு சில நாட்களிலேயே அவர்களின் உண்மையான சுயரூபம் வெளியில் வந்துவிடும். அதன்பிறகு நாம் தவறு செய்துவிட்டோம் என்று நினைத்து வருந்துவார்கள். இதனால் தான் பல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் விவாகரத்து வரை செல்கிறார்கள். எதிர்பார்ப்பு தவறாகும்போது கோபம் தான் வரும். இதை தான் இப்படி சமூகவலைதளங்களில் கொட்டி தீர்க்கிறார்கள்.
நானும் அப்படித்தான் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த ஸ்ரீஜாவை மீனாட்சியாக பார்த்துவிட்டேன். அந்த சீரியலில் எதிர்த்து பேசமால் அமைதியான கோபப்படாமல் மாமியார் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்டு நடப்பாரு என்று நினைத்து திருமணம் செய்தேன். ஆனால் அது எல்லாமே மீனாட்சி கேரக்டரின் குணாதிசியம் என்று அதன்பிறகுதான் புரிந்தது. நான் மீனாட்சியை திருமணம் செய்யவில்லை ஸ்ரீிஜாவை திருமணம் செய்துள்ணுளேன் என்று.
சரவணன் மீனாட்சி தொடரில் ஸ்ரீஜா வேறு மீனாட்சி வேறுதான். இப்போது ஸ்ரீஜா கேரக்டர் நான் எது சொன்னாலும் நீ என்ன எனக்கு சொல்வது? என்று பிடிவாதம் பிடிக்கக் கூடியவர் அதுபோல ஸ்ரீஜா எந்த முடிவு எடுத்தாலும் அதை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டார். அதற்கு காரணமாக ஒரு நல்ல பாயிண்டையும் வச்சிருப்பாங்க. நம்ம விட ரொம்பவே புத்திசாலியா யோசித்து செயல்படுவாங்க.
ஆனால் சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சி அப்படி கிடையாது. நான் அந்த மீனாட்சியை தான் விரும்பினேன். ஆனால் திருமணத்துக்கு பிறகு வேறு விதமாக அமைந்தது. இருந்தாலும் காதலில் மகத்துவம் தெரிந்தவர்களுக்கு சகிப்புத்தன்மை இருக்க வேண்டும் என்று மிர்ச்சி செந்தில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“