திரைத்துறையில் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மிர்ச்சி சிவா, பல படங்களை கைவசம் வைத்து நடித்து வரும் நிலையில், தற்போது தனது பி.எம்.டபிள்.யூ கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூலாக தெரிவித்துள்ளார்.
Advertisment
ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜேவாக பணியாற்றிய மிர்ச்சி சிவா, கடந்த 2001-ம் ஆண்டு வெளியான 12பி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆளவந்தான், விசில் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், 2007-ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாக சென்னை 28 திரைப்படம் இவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் சிவா ஹீரோவாக நடித்திருந்தார்.
அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சரோஜா, சென்னை 28 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த சிவா, சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 2 பாகங்கள், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வணக்கம் சென்னை, ரஜனிகாந்தின் தில்லு முள்ளு படத்தின் ரீமேக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்துள்ள சூது கவ்வும் 2 திரைப்படம், வரும் டிசம்பர் 13-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இன்று வெளியான டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே, சூது கவ்வும் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சிவா, நான் பி.எம்.டபிள்யூ கார் வைத்திருந்தேன். யுவன் தான் அந்த காரை வாங்கும் கடையை எனக்கு காட்டினார். கடையில் இருந்தவரும் இந்த கார் தான் உங்களுக்கு ஏற்ற தகுதியான கார் என்று வாங்க வைத்தார். ஆனால் அந்த கார் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு சென்றுவிட்டது. அப்போது நான் சிரிக்கத்தான் செய்தேன். யாராவது யாரை எடுத்து போய்யிருந்தால் ஏன்டா எடுத்தே என்று கேட்கலாம். ஆனால் கொண்டுபோனது இயற்கை.
Advertisment
Advertisement
இயற்கையாக பார்த்து அடுத்து கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து சம்பாதித்து மீண்டும் அந்த காரை வாங்கினேன். பிள் இயற்கையே அந்த காரை எடுத்துக்கொண்டு போய்விட்டது. அதில் லாஸ்னு சொல்லிக்க எதுவும் இல்லை என்று கூலாக பேசியுள்ளார். சிவாவின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”