Advertisment

நட்புன்னா  என்னன்னு தெரியுமா? நண்பனுக்கு மேக்கப் மேனாக மாறிய நடிகர் நிழல்கள் ரவி

பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட டோனி சிங், தமிழ் மீதும், சல்லிக்கட்டு மீது மரியாதை கொண்டு தமிழ் உரிமை போராட்டங்களில் களமிறங்கி போராட்டம் நடத்தியதனால் டோனி சிங்கை பஞ்சாப் தமிழன் என்று அழைக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
Nizhalgal ravi

படப்பிடிப்பு தளத்தில் தனது கல்லூரி நண்பருக்கு நடிகர் நிழல்கள் ரவி மேக்கப் செய்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் நட்சத்திர குணச்சித்திர நடிகர் நிழல்கள் ரவி. இவர் தற்போது "ஒரு விரல் புரட்சி" என்ற படத்தில் நடித்து வருகின்றார். கோவை ஆர்.எஸ். புரம் பகுதியை சார்ந்த டோனி சிங் எடுத்துவரும் இந்த படத்தில் நடிக்கின்றார். பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட டோனி சிங், தமிழ் மீதும், சல்லிக்கட்டு மீது மரியாதை கொண்டு தமிழ் உரிமை போராட்டங்களில் களமிறங்கி போராட்டம் நடத்தியதனால் டோனி சிங்கை பஞ்சாப் தமிழன் என்று அழைக்கின்றனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்ற டோனி சிங், அந்த அனுபவங்களை மையமாக கொண்டு ஒரு விரல் புரட்சி என்று படம் எடுக்கின்றார். குணச்சித்திர நட்சத்திர நடிகரான நிழல்கள் ரவியும், பஞ்சாப் தமிழன் டோனி சிங்கும் வகுப்பு நண்பர்கள். தற்போது "ஒரு விரல் புரட்சி" படத்தில் இருவரும் ஒன்றாக நடிக்கும் நிலையில் நிழல்கள் ரவி தனது நண்பரான பஞ்சாப் தமிழன் டோனி சிங்குக்கு மேக்கப் செய்து விடுகின்றார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் பகிர ஆரம்பித்திருக்கின்றனர். நட்சத்திர நடிகரானாலும், நண்பனுக்காக மேக்கப் செய்த நிழல்கள் ரவி, நிசத்தில் நட்புக்கு நல் இலக்கணகமாக இருக்கின்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment