தமிழ் சினிமாவில் கலைவணர் என்று போற்றப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்தபோது அவரை பார்க்க எம்.ஜி.ஆர் வராததால் அவரை பற்றி பத்திரிக்கைகளில் வெளியான விமர்சனங்கள் குறித்த செய்திகளுக்கு என்.எஸ்.கே பதிலடி கொடுத்துள்ளார்.
க்ளாசிக் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் பாடகர் என்று தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர் என்.எஸ்.கிருஷ்ணன். நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இவர், 1935-ம் ஆண்டு வெளியான மேனகா என்ற படத்தின் மூலம் திரைத்துறையிவல் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் அறிமுக திரைப்படமான சதிலீலாவதி படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து என்.எஸ்.கிருஷ்ணன் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
மேலும் தனது நகைச்சுவை மூலம் சமூகத்திற்கு தேவையாக கருத்துக்களை வைத்து அசத்தியவர். கலைவாணர் என்ற பட்டத்துடன் வலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன், தனது நகைச்சுவையால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர். நகைச்சுவை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்தாமல் தனது நடிகைச்சுவை மூலம் அனைவரையும் சிரிக்க வைத்த என்.எஸ்.கிருஷ்ணனை எம்.ஜி.ஆரே தனது குருவாக என்.எஸ்.கிருஷ்ணனனை ஏற்றுக்கொண்டார்.
இதனிடையே 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழாவில், தனது மனைவி டி.ஏ.மதுரத்துடன் இணைந்து நாடகம் நடத்திய என்.எஸ்.கே அடுத்த நாள் ஆகஸ்ட் 16-ந் தேதி மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். என்.எஸ்.கே மருத்துவமனையில் இருக்கிறார் என்ற செய்தி கேட்டு அனைத்து நடிகர்களும் அவரை பந்து பார்த்துள்ளனர்.
ஆனால் அவரை குருவாக ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர் மட்டும் அவரை பார்க்க வரவில்லை. இதனால் என்.எஸ்.கே-வை எம்.ஜி.ஆர் மதிக்கவில்லை என்று பத்திரிக்கைகளில் எழுதியுள்ளனர். உண்மையில் எம்.ஜி.ஆர் வெளியூர் படப்பிடிப்பில் இருந்தால் தான் பார்க்க வரவில்லை. ஆனால் அவரை பற்றி வந்த செய்திகளை பார்த்த என்.எஸ்.கே தன்னை வந்து பார்க்கும்படி எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தார். மேலும் எம்.ஜி.ஆர் எப்போது வருகிறார் என்பதை தெரிந்துகொண்டு அந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களையும் மருத்துவமனைக்கு வரவழைத்துள்ளார் என்.எஸ்.கிருஷ்ணன்.
அப்போது அங்கு வந்த எம்.ஜி.ஆர் பத்திரிக்கையாளர்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது பற்றி எம்.ஜி.ஆருக்கு விளக்கம் அளித்த என்.எஸ்.கிருஷ்ணன், நான் மருத்துவமனையில் இருக்கிறேன். எல்லாரும் என்னை வந்து பார்த்தார்கள். ஆனால் நீ வெளியூர் படப்பிடிப்பில் இருந்தால் வரவில்லை. அது எனக்கு தெரியும். ஆனால் எல்லாருக்கும் தெரியாது. அதனால் தான் நீ என்னை பார்க்க வரும்போது இந்த பத்திரிக்கையாளர்கள் எல்லாம் இங்கே இருக்க வேண்டும் என்று விரும்பினேன் என்று கூறியுள்ளார்.
மேலும் என்னால் உனக்கு எந்த கெட்ட பெயரும் வந்துவிட கூடாது என்பதால் தான் இப்படி செய்தேன். இனிமேல் நான் இப்படியே செத்தாலும் பரவாயில்லை என்று என்.எஸ்.கிருஷ்ணன் சொன்னபோது எம்.ஜி.ஆர் தன்னையும் அறியாமல் அழுத்துள்ளார். அதன்பிறகு 1957 ஆகஸ்ட் 30-ந் தேதி என்.எஸ்.கிருஷ்ணன் மரணமடைந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“