பாதி பதிலை சொன்னால் பாதிப்பு எனக்குதான்: தமன்னா குறித்து கருத்துக்கு பார்த்திபன் விளக்கம்!

நடிகை தமன்னா குறித்து நடிகர் பார்த்திபன் பேசிய கருத்து இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்,

நடிகை தமன்னா குறித்து நடிகர் பார்த்திபன் பேசிய கருத்து இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்,

author-image
WebDesk
New Update
Parthiban Tamannah

பார்த்திபன் - தமன்னா

இந்தியன் 2 படத்துடன் தனது டீன்ஸ் படத்தை வெளியிட்ட நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை தமன்னா குறித்து பேசிய சர்ச்சை கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனர் என்று பெயரேடுத்தவர் பார்த்திபன். இவர் இயக்கிய பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், வித்தியாசமான கதையம்சம் என்ற பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் இயக்கிய ஒத்த செருப்பு, இரவின் நிழல் உள்ளிட்ட பாராட்டுக்களை பெற்றதோடு விருதுகளையும் குறித்தது.

இரவின் நிழல் படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்து அசத்திய பார்த்திபன், அடுத்து டீன்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்த இந்த படத்தில், யோகிபாபு, பார்த்திபன் ஆகியோருடன் பல நடிகர்கள் நடித்திருந்தனர். மூட நம்பிக்கைக்கு எதிரான சையின்ஸ் பிக்ஷன் படமான டீன்ஸ் படம் கடந்த ஜூலை 12-ந் தேதி இந்தியன் 2 படத்துடன் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 மோசனமான விமர்சனங்களை பெற்றதால், டீன்ஸ் படத்திற்கு தியேட்டர்கள் அதிகரித்தது.

டீன்ஸ் படம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த பார்த்திபன், இப்போது கதை இருக்கா இல்லையா என்று யாரும் பார்ப்பதில்லை. படத்தில் தமன்னா டான்ஸ் இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார்கள். அவர்களின் டான்ஸ் இருந்தால் அந்த படம் ஹிட்டாகிவிடும் என்று நம்புகிறார்கள் என்று பேசியிருந்தார். பார்த்திபனின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், ஜெயிலர் படத்தில் தமன்னா நடனமாடிய காவாலா பாடல், அரண்மணை 4 படத்தின் இறுதியில் வந்த பாடல்களை தான் பார்த்திபன் சொல்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றன்றனர்.

Advertisment
Advertisements

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ள பார்திபன், நண்பர்களே ஒரு கேள்விக்கு நான் அளிக்கும் பதிலை பாதியாக வெளியிடும் போது பாதிப்பு எனக்காகிறது. நான் எல்லா நட்சத்திரங்களையும் இயக்குனர்களையும் மதிப்புடன் உயர்ந்தே பார்ப்பவன். எனவே அப்பதிவுகள் யார் மனதை புண்படுத்தியிருந்தாலும் மன்னிக்கவும் என்று கூறியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamanna Bhatia R Parthipen

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: