scorecardresearch

முதல் மனைவிக்கு டைவர்ஸ் கொடுக்கல… அப்புறம் எப்படி 2-வது மனைவி? சித்தப்பு சரவணன் சர்ச்சை

எனக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு குழந்தை இல்லை என்பதால் கடந்த 2015-ம் ஆண்டு 2-வது திருமணம் செய்துகொண்டேன் என நடிகர் சரணவன் கூறியுள்ளார்

ParuthiVeeran Saravanan
நடிகர் பருத்தி வீரன் சரவணன்

தன்னிடம் விவாகரத்து வாங்காமலே வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருக்கிறார் என்று நடிகர் பருத்தி வீரன் சரவணனின் முதல் மனைவி சூர்யா ஸ்ரீ கூறியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொண்டாடி ராஜ்ஜியம், சந்தோஷம் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்து இளையதளபதி என்ற பட்டத்துடன் வலம் வந்தாலும் நடிகர் சரவணனுக்கு திருப்புமுனையை கொடுத்த படம் பருத்தி வீரன். இந்த படத்தில் ஹீரோ கார்த்தியின் சித்தப்புவாக நடித்து பிரபலமான சரவணன் சமீபத்தில் அமைச்சர் தாமோ அன்பரசனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், சென்னை முகலிவாக்கத்தில் தான் வீடு வாங்கியதாகவும், இந்த வீட்டை வாங்கி கொடுத்த புரோக்கர், கார்ப்பாக்கிங் பகுதியில், கடை கட்டிவிட்டார் என்றும். இது பற்றி கேட்டபோது வீடு வாங்கும் போதிதே அந்த கடை இருந்தது என புரோக்கர் கூறியுள்ளதாகவும் இந்த பிரச்சினையை முடித்து கொடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரவணன்,

கடந்த 2014 –ம் ஆண்டு சென்னை போரூர் முகலிவாக்கம் பகுதியில் உள்ள லேக்வியூ அபார்ட்மென்டில் செண்பகராமன் என்பவரிடம் இருந்து இரு பிளாட்களை வாங்கினேன். புரோக்கர் ராமமூர்த்தி என்பவர் இந்த பிளாட்களை எனக்கு வாங்கி கொடுத்தார். இந்த வீட்டிற்கு எனக்கு 2 கார் பார்க்கிங் பகுதிகள் இருந்தது. இதன் அளவுகள் 700-800 சதுர அடிகள் இருக்கும்.

எனக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு குழந்தை இல்லை என்பதால் கடந்த 2015-ம் ஆண்டு 2-வது திருமணம் செய்துகொண்டேன். இதனால் எனக்கும் முதல் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கொரோனா காலகட்டத்தில் தகராறு அதிகமானதால், நான் முதல் மனைவி வீட்டுக்கு செல்லவில்லை. அந்த நேரத்தை பயன்படுத்தி புரோக்கர் ராமமூர்த்தி எனது கார்பார்க்கிங்களில் கடை கட்டி அதற்கு மின் இணைப்பும் பெற்றுள்ளார். இது பற்றி கேட்டபோது கார்ப்பார்க்கிங் ஏரியா அவருடையது என்று சொல்கிறார்.

இந்த பிரச்சனை குறித்து கேட்டபோது ராமமூர்த்தியின் மனைவி என்னை தகாத வார்த்தைகளால் திட்டு வெட்டுவேன் குத்துவேன் என்று சொல்கிறார். இதனால் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க கோரியும், ராமமூர்த்தி மற்றும் அவருமைய மனைவி ஜெயமணி ஆகியோர் மீது புகார் அளித்துள்ளதாக நடிகர் சரவணன் கூறியுள்ளார்.

இது குறித்து சரவணனின் முதல் மனைவி சூர்யா ஸ்ரீ ராமமூர்த்தியின் மனைவி ஜெயமணி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், சரவணன் சொல்வது எல்லமே பொய். அவர் என்னையும் ஏமாற்றி நிறைய பிரச்சனைகளை செய்து வருகிறார். ஒரு பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு என்னிடம் பிரச்சனை செய்கிறார். அவர் எனக்கு விவாகரத்தே கொடுக்கவில்லை. அப்புறம் எப்படி 2-வது திருமணம் செய்தார்?

அவர் சொன்ன முகலிவாக்கம் இடத்தில் அவருக்கு எந்த பங்கும் இல்லை. இங்கு வந்து ரவுடியிசம் செய்கிறார். அந்த வீடு நான் சம்பாதித்த பணத்தில் வாங்கியது. ஆனால் அவர் பெயரில் ரிஜிட்டர் செய்தது தான் நான் செய்த பெரிய தவறு. இந்த வீட்டிற்காக 12 லட்சம் பணம் கொடுத்தேன் மீதி 36 லட்சம் லோன் போட்டிருக்கிறேன். அதற்கு இ.எம்.ஐ நான்தான் கட்டி வருகிறேன்.

என்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றினார். பருத்தி வீரன் படத்திற்கு பிறகு பிச்சை எடுக்கும் நிலையில் இருந்த அவருக்கு நான் தான் சோறு போட்டேன். இது குறித்து பிக்பாஸில் கூட கூறியிருந்தார் என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரும் விஸ்வரூபம் எடுத்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actor paruthiveeran saravanan 1st wife complaint against him

Best of Express