மருத்துவமனையில் தீவிர சிகிச்சை : பவர் ஸ்டாருக்கு என்னாச்சி… ரசிகர்கள் ஷாக்

Tamil News Update : நடிகை வனிதா விஜயகுமாருடன் பிக்கப், ட்ராப் என்ற  படத்தில், மீண்டும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள பவர்ஸ்டார் இந்த இப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

Tamil Actor Powerstar Srineevasan Health Update : தமிழ்சினிமாவில் காமெடி நடிகராக அறியப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நீதான அவன் என்ப படத்தின் மூலம் நடிகரான அறிமுகமான சீனிவாசன், தொடர்ந்து அதே ஆண்டு மண்டபம், உனக்காக ஒரு கவிதை, இந்திரசேன உள்ளிட்ட சில படங்களில் கேரக்டர் ரோலில் நடித்துள்ளார். அதன்பிறகு 2011-ம் ஆண்டு லத்திகா என்ற படத்தின் மூலம் ஹீரோ, இயக்குநர் தயாரிப்பாளர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

அதன்பிறகு இருவருட இடைவெளிக்கு 2013-ம் ஆண்டு சந்தானம் மற்றும் டாக்டர் சேது நடிப்பில் வெளியான கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற படத்தின் மூலம் முழு காமெடி நடிகரான அவதாரமெடுத்தார்  அந்த படத்தில் இவரின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அதன்பிறகு ஐ, கேப்மாரி, பேய்மாமா நாங்க ரொம்ப பிஸி, விளையாட்டு ஆரம்பம் உள்ளிட்டபல படங்களில் காமெடி மற்றும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

தற்போது நடிகை வனிதா விஜயகுமாருடன் பிக்கப், ட்ராப் என்ற  படத்தில், மீண்டும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள பவர்ஸ்டார் இந்த இப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வனிதா விஜயகுமாருடன் பவர்ஸ்டார் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் பெரும் வைரலானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தளத்தில் திடீரென பவர் ஸ்டார் சீனிவாசன் மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர், உடனாடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, உடல் நலம் தேறிய அவருக்கு, திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மயங்கி விழுந்ததாக படக்குழு தரப்பில் கூறப்பட்டது. தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டள்ள பவர் ஸ்டார் சீனிவாசன், உடல்  இளைத்து எலும்பும் தோலுமாக இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு என்ன என்று கேட்டு வருகின்றனர். இது தொடர்பாக வெளியான தகவலின்படி அவருக்கு, முதுகு தண்டுவடத்தில் கிராக் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil actor power star srinivasan health issue update in tamil

Next Story
தமிழில் நிவின் பாலியின் ‘ரிச்சி’… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com