சன் டி.வி.யில் வரவிருக்கும் புதிய சீரியல் – ரீஎன்ட்ரி கொடுக்கும் 90-கிட்ஸ் நாயகன்

Tamil Serial Update : பூவே உனக்காக சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அந்த சீரியலில் நடித்து வந்த நடிகர் நடிகைகளுக்கும் பெரிய ஷாக்காக இருந்தது.

சன் டி.வி.யில் வரவிருக்கும் புதிய சீரியல் – ரீஎன்ட்ரி கொடுக்கும் 90-கிட்ஸ் நாயகன்

Tamil Serial Update : சின்னத்திரையில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் சன் டி.விக்கு முக்கிய இடம் உண்டு. காலை 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வலை பல சீரியல்களை ஒளிபரப்பி வரும் சன்டிவிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே சமயம் அவ்வப்போது புதிய சீரியல்களும் அரங்கேறி வருகிறது.

மேலும் டிஆர்பி ரேட்டிங்கில் மற்ற சேனல்களுக்கு டஃப் கொடுக்கும் சன்டிவியில் தற்போது கயல், ரோஜா, வானத்தைப் போல, சுந்தரி உள்ளிட்ட சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதோடு மட்டுமல்லாமல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது.

அதேபோல் சன்டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்த பூவே உனக்காக சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அந்த சீரியலில் நடித்து வந்த நடிகர் நடிகைகளுக்கும் பெரிய ஷாக்காக இருந்தது.  

பூவே உனக்காக சீரியலுக்கு பதிலாக செவ்வந்தி என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடுமட்டுமல்லாமல் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் 90-கிட்ஸ்களின் நாயகனாக இருந்த ராகவ் நடிக்க உள்ளதாகவும் அவருடன் இணைந்து திவ்யா ஸ்ரீதர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2001ம் ஆண்டு ஜெயா டிவியில் ஒளிபரப்பான அண்ணி தொடரின மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ராகவ், 90 கிட்ஸ்களின் பிரபலமான நடிகராக இருந்தார் தொடர்ந்து, சன்டிவியின் அலைகள், அரசி. ஜீ தமிழின் செம்பருத்தி. தற்போது சன்டிவியின் அன்பே வா பாண்டவர் இல்லம் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார்.

மேலும் தமிழ் ஆங்கிலம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நாயகனாகவும், முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். சினிமா மற்றும் சீரியல் மட்டுமல்லாது, சின்னத்திரையின் ரியாலிட்டி ஷோக்களான, ஜோடி நம்பர் ஒன், மானாட மயிலாட. ரவுடி பேபி. டான்ஸ் ஜோ டான்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actor raaghav re eltry in sun tv serial sevvanthi update

Exit mobile version