வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நடிகை ராதிகா அரை டவுசர் அணிந்தபடி வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த புகைப்படத்திற்கு நடிகர் ரஹ்மான் எழுப்பியுள்ள கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Advertisment
தமிழ் சினிமாவின் நடிகவேள் எம்.ஆர்.ராதா மகள் என்ற அடையாளத்துடன் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா. தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ராதிகா, நடிகர் பிதாப் போத்தனை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமண வாழ்க்கை ஒரு வருடம் நீடித்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்த ராதிகா ரிச்சர்ட் ஹார்டி என்பரை 2-வது திருமணம் செய்துகொண்டார்.
சில ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் பிரிந்த ராதிகா 2001-ம் ஆண்டு நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நிலையில், சினிமாவில் வாய்ப்பு இல்லாத ராதிகா சின்னத்திரையில் தனது ஆதிக்கத்தை செலுத்தினார். இதில் சித்தி அண்ணாமலை, செல்வி, வாணி ராணி உள்ளிட்ட பல தொடர்களை தயாரித்து நடித்திருந்தார்.
நடிப்பில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது வெளிநாடு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ள ராதிகா இது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள ராதிகா, அரை டவுசரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Advertisment
Advertisements
ராதிகா சரத்குமார்
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நடிகர் ரஹ்மான், தனியா போயிருக்கீங்களா, கூட யாரும் வரவில்லையா? என்று கேட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வரும் நிலையில், ராதிகா சரத்குமார் தனியாக போஸ் கொடுத்த தனியாவா போயிருக்கீங்கனு ஏன் இவ்ளோ ஆர்வமாக கேட்கிறார். அப்போ அந்த போட்டோவை யார் எடுத்திருப்பா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“