scorecardresearch

அப்போ ஐஸ்வர்யா… இப்போ சௌந்தர்யா… இது என்ன ரஜினி வீட்டுக்கு வந்த சோதனை!

சமீபத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா தனது வீட்டில் வேலை செய்பவர்கள் நகைகள் திருடிவிட்டதாக புகார் அளித்திருந்தார்.

Rajinikanth
ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா – சௌந்தர்யா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது வீட்டில் நகைகள் திருடு போனதாக புகார் அளித்திருந்த நிலையில், தற்போது ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா தனது சொகுசு காரின் சாவி திருடுபோய்விட்டதாக புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் நடித்து வருகிறார். மேலும் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் முழுநீள கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் ஐஸ்வர்யா தனது வீட்டில் வேலை செய்பவர்கள் நகைகள் திருடிவிட்டதாக புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரில் ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா தனது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு காரின் சாவி காணாமல் போய்விட்டதாக புகார் அளித்துள்ளார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கல்லூரிக்கு தனது ரேஞ்ச் ரோவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது காரின் மற்றொரு சாவி பவுச்சுடன் காணாமல் போனதாக புளார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சென்னை தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actor rajinikanth 2nd daughter soundharya police complaint