தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நடிகர் தனுஷ் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் தமிழும் ரஜினிகாந்த் இன்று தனது 73-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் தனுஷ் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துகொண்டதை தொடர்ந்து ரஜினிகாந்தின் மருமகன் என்ற அடையாளத்துடன் வலம் வந்தார்.
ஆனால் கடந்த ஜனவரி மாதம் தங்களது திருமண வாழக்கை முடிவுக்கு வருவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அறிவித்தனர். இவர்களின் இவர்களின் அறிவிப்பு தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவரும் குழந்தைகளுக்காகவாது சேர்ந்து வாழ வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.
இந்த அறிவிப்புக்கு பிறகு இருவரும் தங்களது பணிகளில் பிஸியாக இருந்து வந்த நிலையில், ஐஸ்வர்யாவின் ஆல்பம் பாடல் வெளியானபோது கூட தனது தோழிக்கு வாழ்த்துக்கள் என்று தனுஷ் பதிவிட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே கடந்த சில மாதங்களாக தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து வாழ உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இருவரும் விவாகரத்து அறிவிப்பை வெளிட்டிருந்தாலும், சட்டப்படி விவாகரத்து பெறாத நிலையில், இதுவரும் சேர்ந்து வாழ உள்ளதாக வெளியாக தகவல் உண்மை என்று பலரும் கூறி வரும் நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் ரஜினிகாந்துக்கு தனுஷ் ஹேப்பி பர்த்டே தலைவா என்று பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான தனுஷ் அவரை வைத்து ஒரு படம் இயக்குவதாக தகவல் வெளியானது. இதனால் பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அதன்பிறகு இந்த அறிவிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. தற்போது இளம் இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பு அளித்து வரும் ரஜினிகாந்த் தனுஷ்க்கு வாய்ப்பு கொடுப்பாரா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/