Advertisment
Presenting Partner
Desktop GIF

சூப்பர் ஸ்டாரை விட அந்த நடிகை பிசி… அவருக்காக 104 டிகிரி காய்ச்சலில் டான்ஸ் ஆடிய ரஜினிகாந்த்!

நடிகையின் கால்ஷீட் இல்லை என்பதால் 104 டிகிரி ஜூரத்துடன் நடிகர் ரஜினிகாந்த் பாடலுக்கு நடனமாடியதாக தகவல் வெளியாகியுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth

Rajinikanth

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திரை வாழ்க்கையில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வரும் நிலையில், இன்றளவும் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் எவ்வித சினிமா பின்னணியும் இல்லாமல் சாதித்த முக்கிய நடிகர் ரஜினிகாந்த் என்பது பலரும் அறிந்த உண்மை.

Advertisment

தொடக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் நடித்த ரஜினிகாந்த், சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். அதன்பிறகு 1978-ம் ஆண்டு வெளியான பைரவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர் தற்போதுவரை நாயகனாக தனி முத்திரை பதித்து வருகிறார். அவரது காலக்கட்டத்தில் நாயகனாக நடித்த பலரும் இப்போது கேரக்டர் நடிகராக மாறிவிட்டாலும் ரஜினிகாந்த் மாஸ் இன்னும் குறையவில்லை என்று பல சினிமா பிரபலங்களை சொல்லி வருகின்றனர்.

படப்பிடிப்பில் ரஜினிகாந்த் தன்னுடன் நடிக்கும் சக நடிகர் நடிகைகளுக்காக விட்டுக்கொடுத்து அவர்கள் நடிப்பை பார்த்து பாராட்டுவார் என்று பல நடிகர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகையின் கால்ஷீட் இல்லை என்பதால் 104 டிகிரி ஜூரத்துடன் நடிகர் ரஜினிகாந்த் பாடலுக்கு நடனமாடியதாக பழம்பெரும் நடிகை வடிவுக்கரசி கூறியுள்ளார். இது தொடர்பான சமீபத்தில் பேசிய அவர் கூறுகையில்,

ரஜினிகாந்துடன் முதல் படம் படிக்காதவன் அதன்பிறகு மிஸ்டர் பாரத், உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் அருணாச்சலம் படத்தில் தான் நான் பிரபலமானேன். இந்த படத்தில் முதலில் நடிக்க என்னை அனுகியபோது ரஜினிகாந்துக்கு பாட்டியா என்று பயந்தேன். ஆனால் என்னை தைரியம் சொல்லி நடிக்க சொன்னார்கள். ஆனாலும் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

Arunachalam
அருணாச்சலம் படத்தில் ரஜினிகாந்த் சௌந்தர்யா

படத்தில் எனக்கு 80 வயது பெண் வேடம் கூண் விழுந்த பெண் என்பதால் எனது முதுகில் பிளாஸ்டிக் வைத்து கட்டியிருந்தார்கள். அதனால் எனக்கு வலி அதிகமாக இருந்ததால், மேக்கப் போட்டுக்கொண்டு நடிக்க போகும்போது அதை வைத்துக்கொள்கிறேன் என்று சொன்னேன். அதை பார்த்து எனக்கு வலி இருப்பதாக உணர்ந்த இயக்குனர் இதை ரஜினி சாரிடம் சொல்லியிருக்கிறார். அன்றிலிருந்து எனது காட்சிகளை முதலில் முடித்துவிடுவார்கள்.

இதற்கு ரஜினி சார்தான் காரணம் என்று எனக்கு அதன்பிறகு தான் தெரியும். அதேபோல் இந்த படத்தின் மாதாடு மாதாடு மல்லிகை பாடல் காட்சி எடுக்கும்போது ரஜினிக்கு 104 டிகிரி ஜுரம். படப்பிடிப்பு தளத்தில் வந்து நடுக்கிங்கொண்டிருந்தார். அப்போது இயக்குனரிடம் விசாரித்தபோது அவருக்கு ஜூரம் அதிகமாக இருக்கிறது. ஆனால் சௌந்தர்யாவின் கால்ஷூட் இல்லை அதனால் இன்று படப்பிடிப்பு நடந்த வேண்டிய சூழல் என்று கூறினார்.

அதன்பிறகு அந்த பாடல் படமாக்கப்பட்டது. 104 டிகிரி ஜுரத்துடன் ரஜினிகாந்த் நடித்து கொடுத்தார். அந்த பாடலும் ஹிட் ஆனாது. அவர் ஒரு முன்னணி நடிகர் நினைத்திருந்தால் உடல்நிலை சரியில்லை என்று கூறி படப்பிடிப்பை தள்ளி போட்டிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யாமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஆக கூடாது என்பதால் தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் நடித்துள்ளார் என்று வடிவுக்கரசி கூறியுள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment