Advertisment

வேட்டையனை முடித்த ரஜினிகாந்த் : கூலியாக களமிறங்குவது எப்போது? வைரல் போட்டோ

வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வந்தது.

author-image
WebDesk
New Update
Vettaiya rajinika

வேட்டையன் படப்பிடிப்பு நிறைவு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்ற நிலையில், தற்போது தனக்கான காட்சிகளை நடித்து முடித்து படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஜெயிலர் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த்அடுத்து டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அமிதாப் பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சுவாரியார், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில், லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

கேரளாவில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு, நெல்லை,மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனிடையே தற்போது வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் அனைத்து படமாக்கப்பட்டு, அவருக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள லைகா நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படப்பிடிப்பில் தனது போர்ஷன்களை முடித்துவிட்டதாக அறிவித்து, இயக்குனர் ஞானவேல் ரஜினிகாந்துக்கு பூங்கொத்து கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வேட்டையன் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இதனிடையே தற்போது வேட்டையன் படப்பிடிப்பை முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment