Advertisment

தூத்துக்குடியில் ரஜினிகாந்த்: வேட்டையன் ஷூட்டிங்

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்க உள்ளது.

author-image
WebDesk
New Update
Rajinikanth Tuticorin

தூத்துக்குடியில் ரஜினிகாந்த்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடியில் நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் ரஜினிகாந்த் வரும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மஞ்சு வாரியார். பகத் பாசில், ராணா, அமிதாப் பச்சன், ரித்திகா சிங் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், அனிருத் இசையமைத்து வருகிறார்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கிய வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு, தூத்தக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்றது. அடுத்து படக்குழு மும்பை சென்ற நிலையில், அங்கு அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனிடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு வேட்டையன் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்க உள்ளது.

இதற்காக தூத்துக்குடி சென்றுள்ள நடிகரு ரஜினிகாந்தை விமான நிலையத்தில் பார்த்த ரசிகர்கள், அவரை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து வெளியேறும் ரஜினிகாந்த், பழுப்பு நிற டி-சர்ட் மற்றும் கருப்பு பேன்ட் அணிந்திருந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 12-ந் தேதி வேட்டையன் படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ரஜினிகாந்த், போலி என்கவுன்டர்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு கேரக்டராகவும், சமூக அக்கறையுள்ள பாத்திரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதே போல் 'வேட்டையன்' படம்  ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் 32 ஆண்டுகளுக்கு பின் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment