/tamil-ie/media/media_files/uploads/2022/06/Sarikesu.jpg)
நடிகரும் நாடக கலைஞருமான ஒய்.ஜி.மகேந்திரனின் சாருகேசி என்ற நாடகத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் நாடக குழுவினருக்கு தனது இல்லத்தில் விருந்து அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் தமிழ் நாடகக் குழுவான ஒய்.ஜி.மகேந்திரனின் தலைமையில் யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்டின் (யுஏஏ) ‘சாருகேசி’ நாடகத்தை பார்த்துள்ளார். இந்த நாடகத்தால் ஈர்க்கப்பட்ட ரஜினிகாந்த் நாடக குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், தற்போது நடிகர், ரஜினிகாந்த் ‘சாருகேசி’ நாடக குழுவினர் அனைவருக்கும் தனது பாராட்டு தெரிவிக்கும் வகையில் தனது இல்லத்தில் விருந்து ஏற்பாடு செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தை சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது.
மறைந்த வசன கர்த்தாவும், நாடக எழுத்தாளருமான கிரேசி மோகனால் ஈர்க்கப்பட்ட ‘சாருகேசி’ நாடகம் கடந்த ஆண்டு யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்டின் 70வது ஆண்டு பொன்விழா சமயத்தில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Superstar @rajinikanth gave a Surpise treat to #YGmahendran & his team after watching his recent Stage play #Charukesi in his residence#MassnaThalaivar#ThalaivarnaMass#NikilNews23#NM#NikilMurukanpic.twitter.com/Ne59EaNccl
— Nikil Murukan (@onlynikil) June 27, 2022
அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் கோலமாவு கோகிலா டாக்டர் மற்றும் பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்தின் 169-படமான இந்த படத்திற்கு ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
அதில் முக்கிய கேரக்டரில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய் மற்றும் ரம்யா கிருஷ்ணன் போன்ற நட்சத்திர நடிகர்களின் பெயர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.