ஜெயிலர் படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் தான் சினிமாவுக்கு வருவதற்கு முன் வேலை செய்த கர்நாடக அரசு பேருந்து பணிமனையில் நடத்துனர்களுடன் உரையாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஜெயிலர். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், விநாயகன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது,
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடடையே கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியான ஜெயிலர் படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ500 கோடிக்கு மேல் வசூலித்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. இதனிடையே படத்தின் வெளியீட்டுக்கு முன்பே இமயமலை பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய நிலையில், பிரபலங்கள் பலரையும் சந்தித்து வருகிறார்.
Advertisment
Advertisements
அந்த வகையில் உத்திரபிரதேச முதல் யோகி ஆதித்யநாத், சண்டிகார் ஆளனர் சி.பிராதாகிருஷ்ணன், உள்ளிட்ட பலரையும் சந்தித்து வருகிறார். மேலும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அம்மாநில துணை முதல்வருடன் இணைந்து ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை பார்க்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் யோகி படம் பார்க்க வராத நிலையில், துணை முதல்வர் படத்தின் பாதியிலேயே அலுவலல் வேலையாக கிளம்பிவிட்டார் என்று கூறப்பட்டது.
இதனிடையே யோகி ஆதித்யநாத்தை சந்திக்கும்போது அவரை விட வயதில் பெரியவரான ரஜினிகாந்த் அவரின் காலில் விழுந்து வணங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், துறவிகள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள் காலில் விழுந்து வணங்குவது எனது வழக்கம் என்று சென்னை திரும்பியவுடன் ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்தார். இதனிடையே சினிமாவுக்கு வருவதற்கு முன்பு கர்நாடக அரசு பெருந்தில் நடத்துனராக வேலை செய்த நடிகர் ரஜினிகாந்த் இன்று தான் வேலை செய்த பணிமனைக்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.
தான் நடத்துனராக இருக்கும்போது ஓட்டுநராக பணியாற்றிய தனது சிறந்த நண்பர் ராஜ் பகதூருடன் ஜெயநகர் பேருந்து நிலையத்திற்கு சென்ற ரஜினிகாந்த் மற்றும் பஸ் டிரைவர்கள் மற்றும் பிஎம்டிசி நடத்துநர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக தனது நண்பர் பஹதுருடன் கலாசிபாளையத்தில் உள்ள ராகவேந்திர சுவாமி கோவிலில் பிரார்த்தனை செய்த ரஜினிகாந்த் அதன்பிறகு பணிமனைக்கு விசட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”