Advertisment

ராமராஜன் மகளா இவர்? அப்படியே நளினி மாதிரியே இருக்காரே! வைரல் போட்டோஸ்

1977-ம் ஆண்டு மீனாட்சி குங்குமம் என்ற படத்தின் மூலம் சிறிய கேரக்டரில் அறிமுகமான ராமராஜன், விஜயகாந்த் சந்திரசேகர் இணைந்து நடித்த சிவப்பு மல்லி என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Ramarajan Daughter

தனது மகளுடன் ராமராஜன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான ராமராஜன் பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சாமானியன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், தற்போது அவரின் மகள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisment

80-90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோர் படங்களுக்கே வசூலில் டஃப் கொடுக்கும் அளவுக்கு உயர்ந்தவர் ராமராஜன். உதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறிய ராமராஜன் தான் நடிகராக அறிமுகமானது முதல் இன்றுவரை ஹீரோவாகவே நடித்து வருகிறார்.

1977-ம் ஆண்டு மீனாட்சி குங்குமம் என்ற படத்தின் மூலம் சிறிய கேரக்டரில் அறிமுகமான ராமராஜன், விஜயகாந்த் சந்திரசேகர் இணைந்து நடித்த சிவப்பு மல்லி என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதன்பிறகு பல படங்களில் சிறிய கேரக்டரில் நடித்திருந்த இவர், 1986-ம் ஆண்டு வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

அதன்பிறகு எங்க ஊரு பாட்டுக்காரன், இவர்கள் இந்தியர்கள் என்ற படத்தில் நடித்த ராமராஜன், 1987-ம் ஆண்டு வெளியான ஒன்று எங்கள் ஜாதியே என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்கள் நாயகன் என்ற பட்டத்துடன் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த ராமராஜனுக்கு திருப்புமுணையை ஏற்படுத்திய படம் கரகாட்டக்காரன்.

கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். செந்தில் கவுண்டமணி, ஆகியோரின் காமெடி அறிமுக நாயகியாக கனகாவின் நடிப்பு என இந்த படம் திரையரங்குகளில் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. இந்த படத்தில் வரும் வாழைப்பட காமெடி இன்றும் பலதரப்பட்ட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு பல படங்களில் நடித்த ராமராஜன் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு அருணா அருண் என இரு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2001-ம் ஆண்டு ராமராஜன் தனது மனைவி நளினியை பிரிந்தார். அதன்பிறகு சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லாத நிலையில், அரசியல் பக்கம் தனது கவனத்தை திருப்பிய ராமராஜன், அதன்பிறகு அதில் இருந்தும் விலகினார். கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு வெளியான மேதை என்ற படத்தில் நடித்திருந்த ராமராஜன் தற்போது 12 வருட இடைவெளிக்கு பிறகு சாமானியன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே ராமராஜனுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், இவர்கள் இருவருமே மீடியா வெளிச்சம் படாமல் இருந்து வந்தனர். இதனிடையே தற்போது ராமராஜன் தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அப்படியே நடிகை நளினியை உறித்து வைத்திருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

ramarajan Actor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment