scorecardresearch

துரைசிங்கம் டூ பழனிச்சாமி… பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய நடிகர் ரீ-என்டரி

தற்போது இங்கிலீஷ் கற்றுக்கொள்வதற்காக பாக்யா ஒரு இன்ஸ்ட்யூட் செல்கிறார். அந்த இன்ஸ்ட்யூட்டின் உரிமையாளராக நடிகர் ரஞ்சித் வருகிறார்.

துரைசிங்கம் டூ பழனிச்சாமி… பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய நடிகர் ரீ-என்டரி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் நடிகர் ரஞ்சித் ரீ-என்டரி கொடுத்துள்ளார்.

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. திருமணத்திற்கு மீறிய உறவு, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பலவற்றை பற்றி எடுத்து கூறும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபி பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். இதற்கு முன்பு நண்பர்களாக இருந்த பாக்யாவும் ராதிகாவும் தற்போது எதிரிகளாக மாறிவிட்டனர். பாக்யா செல்லும் இடமெல்லாமல் தடைகள் வந்துகொண்டிருக்கிறது. இதை எதிர்த்து அவர் முன்னேறிக்கொண்டிருக்கிறார். ஆனால் தான் இல்லை என்றால் அவர் ஒன்றுமே இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்த கோபிக்கு பாக்யாவின் முன்னேற்றம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

இதனிடையே ஏற்கனவே ராதிகாவின் ஆபீஸில் கிடைக்க வேண்டிய கேண்டீன் காண்ட்ராக்ட் கிடைக்காத நிலையில், சமீபத்தில் நடந்த டெண்டரில் பாக்யாவுக்கு அந்த காண்ட்ராக்ட் கிடைத்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ராதிகா பாக்யாவை இங்கிலீஷில் கேள்விகள் கேட்டு மிளர வைத்துவிட்டார். ஆனாலும் பிடிகொடுக்காத பாக்யா இப்போதான் புதிய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். இதையும் கற்றுக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

இதன் காரணமாக தற்போது இங்கிலீஷ் கற்றுக்கொள்வதற்காக பாக்யா ஒரு இன்ஸ்ட்யூட் செல்கிறார். அந்த இன்ஸ்ட்யூட்டின் உரிமையாளராக நடிகர் ரஞ்சித் வருகிறார். ஏற்கனவே விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் நடிகர் ரஞ்சித் தற்போது மீண்டும் பழனிச்சாமியாக பாக்கியலட்சுமி சீரியலில் ரீ-என்டரி கொடுத்துள்ளார்.

தற்போது ரஞ்சித் வரும் காட்சிகள் தொடர்பான ப்ரமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் இது நாங்கள் எதிர்பார்க்காதது கதை இப்போதான் சூடுபிடிக்க போகிறது என்று பதிவிட்டு வருகின்றனர்.   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actor ranjith re entry in vijay tv baakiyalakshmi serial