/indian-express-tamil/media/media_files/2025/05/15/npWYGlEDLfAMVdedstGy.jpg)
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை விவாரகத்து செய்வதாக அறிவித்திருந்த நிலையிவலல், இந்த வழக்கின் விசாரணை சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனிடையே, ஆர்த்தி மற்றும் அவரது அம்மா சுஜாதா ஆகிய இருவருக்கும் 24 மணி நேரம் கெடு விதித்து ரவி மோகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரவி, ஜெயம் ரவி என்று அழைகக்ப்பட்ட நிலையில், சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என்று மாறறிக்கொண்டதாக அறிவித்திருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா என்பவரை திருமணம் செய்துகொண்ட ரவி மோகனுக்கு 2 மகன்கள் உள்ளனர். சமீப காலமாக வெற்றிப்படம் கொடுக்க தடுமாறி வரும் ரவி மோகன், தனது மனைவியை விவாவரத்து செய்வதாக கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தார்.
இந்த முடிவுக்கு, அவரது மனைவி ஆர்த்தி, இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று கூறியிருந்தார். மேலும், ஆர்த்தி குடும்பத்தினாரால் தான் கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளானதாக ரவி மோகன் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஆர்த்தியின் அம்மா, சுஜாதா, ரவி மோகன் தான் என்னை படம் தயாரிக்குமாறு சொன்னார். அவரால் எனக்கு ரூ100 கோடி கடன் ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இவ்வாறு இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்ட நிலையில், தன்னை பற்றி அவதூறு கருத்துக்கள் பரப்புவதற்கு தடை விதிக்க கோரி ரவி மோகன் வழக்கு தொடர்ந்தார்,
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சமூகவலைதளங்களில் அவதூறாக பதிவிட்ட அறிக்கைகளை நீக்க வேண்டும். இனிமேல் இவ்வாறு எந்த அறிக்கையும் வெளியிட கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து ரவி மோகன் தனது சமூகவலைதளங்களில் இருந்து அறிக்கைகளை நீக்கிவிட்ட நிலையில், ஆர்த்தி இன்னும் தனது சமூகவலைதளங்களில் இருந்து எந்த பதிவையும் நீக்கவில்லை. இது குறித்து ரவி மோகன், மற்றும் அவரது அம்மா சுஜாதா விஜயகுமார் ஆகிய இருவருக்கும் லீகல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், என்னை பற்றி சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ள அனைத்து அவதூறு பதிவுகளையும் 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நோட்டீஸ் தொடர்பான பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரவி மோகன் பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆர்த்தி மற்றும் அவரது அம்மா சுஜாதா ஆகிய இருவரும் தங்கள் அறிக்கைகளை நீக்கியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.