ஷாலினி அஜித் அண்ணன் ரிச்சர்ட்: 22 வயது இளைய யாஷிகா ஆனந்துடன் காதல் நிஜமா?

தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் சுமார் நாற்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ரிச்சர்ட் ரிஷி

தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் சுமார் நாற்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ரிச்சர்ட் ரிஷி

author-image
WebDesk
New Update
Richard rishi

நடிகர் ரிச்சர்ட் ரிஷி - யாஷிகா ஆனந்த் காதல்?

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரரும் நடிகருமன ரிச்சர்ட் ரிஷி நடிகை யாஷிகா ஆனந்தை காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரிச்சர்ட் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக தற்போது தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளவர் ரிச்சர்ட் ரிஷி. இவருக்கு ஷாலினி, ஷாமிலி என இரு சகோதரிகள் உள்ளனர். இதில் ஷாலினி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தை திருமணம் செய்துகொண்டது அனைவரும் அறிந்த ஒன்று.

இதுவரை தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் சுமார் நாற்பது படங்களுக்கு மேல் நடித்துள்ள ரிச்சர்ட் ரிஷிக்கு தமிழில் சமீபத்தில் வெளியான திரௌபதி மற்றும் ருத்ரதாண்டவம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. 45 வயதாகும் ரிச்சர்ட் இன்னும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில்,  ஒரு பழம்பெரும் தமிழ் பாடலாசிரியரின் பேத்தியுடன் நீண்டகால உறவில் இருப்பதாக வதந்தி பரவி வந்தது.

ஆனாலும் ரிச்சர்ட் இதுவரை தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எவ்வித தகவலும் வெளியிடமல் ரகசியமாக வைத்திருந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு புகைப்படம் அவரது காதல் வாழ்க்கையைப் பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷிக்கு, இளம் நடிகை யாஷிகா ஆனந்த் முத்தமிடும் படத்தைப் பகிர்ந்துள்ளார், இருவரும் சூரிய ஒளியில் மறைந்திருப்பது போல் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. "சூரியன் நம்மை முத்தமிடும்போது சில இடங்களில்" என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அஜித்குமார் குடும்பத்தில் யாஷிகா விரைவில் மருமகளாக மாற உள்ளார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'கவலை வேண்டும்' படத்தில் அறிமுகமான யாஷிகா பின்னர் தமிழ் சினிமாவின் அடல்ட் காமெடி படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் நடித்தார், ஆனால் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் தமிழ்' போட்டியில் போட்டியாளராக அதிக புகழ் பெற்றார். சமீபத்தில் ஒரு கார் விபத்தில் சிக்கினார், அதில் அவரது நெருங்கிய தோழி பவானி மரணமடைந்த நிலையில், யாஷிகா உடலின் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.

45 வயதான ரிச்சர்டுக்கும் 23 வயது யாஷிகாவுக்கும் 22 வயது வித்தியாசம் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இவர்கள் எப்போது, ​​எங்கே சந்தித்தார்கள், எப்படி ஒருவருக்கொருவர் காதலிக்க தொடங்கினார்கள் என்பதை அறிய அவர்கள் ஆர்வமாக உள்ளனர். அதே சமயம் இது உண்மையில் காதலா அல்லது புதிய படத்திற்கான புதுமையான விளம்பர உத்தியா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: