Advertisment

இந்திரஜா திருமண வரவேற்பு... கமல்ஹாசன் முதல் நயன்தாரா வரை : பிரபலங்கள் கொடுத்த கிப்ட் என்ன?

ரோபோ சங்கர் மகள் திருமண வரவேற்பில் நடிகர் கமல்ஹாசன் நேரில் கலந்துகொண்ட நிலையில், நயன்தாரா வீடியோ காலிங்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Kamal Haasan Nayanthara Indrajaa

கமல்ஹாசன் -நயன்தாரா - இந்திரஜா

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா திருமணம் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி மதுரையில் நடைபெற்ற நிலையில், சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள் பலரும் புதுமண தம்பதிக்கு பரிசுப்பொருட்களை கொடுத்து மகிழ்வித்துள்ள நிலையில், பரிசுப்பொருட்களை பிரிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

மெமிக்ரி கலைஞராக இருந்து தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரோபோ சங்கர். டிவி. நிகழ்ச்சிகளில், சிவாஜி கணேசன், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் மாதிரி மெமிக்ரி செய்து அசத்திய இவர், 1997-ல் விஜயகாந்த் நடிப்பில் வெளியான தர்மச்சக்கரம் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், பல படங்களில் வில்லன்களுக்கு அடியாளாக நடித்துள்ளார்.

தொடர்ந்து ஆறாது சினம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சிங்கம் 3, விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிரியங்கா என்ற பெண்ணை மணந்துகொண்ட ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற ஒரு மகள் இருக்கிறார். விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்திருந்த இந்திரஜா, அடுத்து விருமன் படத்தில் நாயகியின் தோழியாக சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர், தற்போது உடல்நலம் தேறியுள்ள நிலையில், தனது மகளின் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று யோசித்து அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதில் ரோபோ சங்கரின் மனைவி உறவுமுறையில் தம்பியான கார்த்திக் என்பவரை மாப்பிள்ளையாக தேர்வு செய்து திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இவர்களின் திருமணம் கடந்த மாதம் 24-ந் தேதி மதுரையில் நடைபெற்றது. இதில் அறந்தாகி நிஷா, மற்றும் நடிகர் சூரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன் பிறகு சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், பலரும் பரிசுப்பொருட்களை கொடுத்து புதுமண தம்பதியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். தற்போது பரிசுப்பொருட்களை பிரித்து பார்க்கும் வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மாப்பிள்ளை கார்த்தியின் நண்பர்கள் 25 லட்சம் மதிப்பிலான வைரக்கல் பதித்த ரோலக்ஸ் வாட்சை பரிசாக கொடுத்துள்ளனர். அடுத்து வித்தியாசமாக பூக்கள் இருந்த பொக்கே ஒன்றைய கமல்ஹாசன் வழக்கியுள்ளார். கமல் எப்போதும் வித்தியாசமான பரிசுப்பொருட்களை கொடுப்பவர் என்று கூறியுள்ள இந்திரஜா அவருக்காக ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

திருமணத்திற்கு நேரில் வராத நடிகை நயன்தாரா, பிகில் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த இந்திரஜாவுக்கு, வீடியோ காலிங் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், பிகில் படத்தின் இசையமைப்பாளர் ஏ,ஆர்.ரஹ்மான், பொக்கேவுடன் மணமக்களை வாழ்த்தி ஒரு கடிதத்தையும் அனுப்பி வைத்துள்ளார். இதேபோல் பல விலைஉயர்ந்த பரிசுப்பொருட்கள் இந்திரஜாவுக்கு திருமணப்பரிசாக கிடைத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Robo Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment