/tamil-ie/media/media_files/uploads/2021/11/Sanjeev.jpg)
Actor Sanjeev Surprise Entry IN Biggboss Season 5 : 1989-ம் ஆண்டு விஜயகாந்த், ஷோபனா நடிப்பில் வெளியான பொன்மனச்செல்வன் படத்தில் கவுணிடமணியின் மகனாக அறிமுகமானவர் நடிகர் சஞ்சீவ், அதன்பிறகு விஜயுடன் சந்திரலேகா, நிலவே வா, பத்ரி, புதிய கீதை, மாஸ்டர் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 2002-ம் ஆண்டு சன்டிவியில் ஒளிபரப்பாகி பெரிய ஹிட் அடித்த மெட்டி ஒலி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகான சஞ்சீவ், திருமதி செல்வம் என்ற தொடரின் மூலம் ஏராளமான இல்லத்தரசிகளின் நன்மதிப்பை பெற்றார்.
இவர் கட்ந்த 2009-ம் ஆண்டு பிரபல சீரியல் நடிகை பிரீத்தி என்பதை திருமணம் செய்துகொண்டார். தற்போது வெள்ளித்திரை, சின்னத்திரை என்று பிஸியாக நடித்து வரும் சஞ்சீவ், சர்ப்ரைசாக பிக்பாஸ் சீசன் 5-ல் என்ட்ரி கொடுத்துள்ளார். நடிகர் விஜயின் நெருங்கிய நண்பரான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.
சஞ்சீவ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வீட்டில் தயாராகும் வீடியோ பதிவை அவரது மனைவி பிரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் சீரியல் நடிகர் தீபக், வெங்கட் ஆகியோருடன் உள்ள சஞ்சீவ், எல்லாரும் நல்லா கேம் விளையாண்டுகிட்டு இருக்காங்க அந்த வீட்ல நான் நானா இரக்க விரும்புறேன். எனக்கு கோவம் வரும். எல்லாருக்கும் இருக்குற மாதிரியே. அதாவது பாசத்த காட்டினா பாசத்த காட்டுவேன். கோவத்த காட்டுனா கோவத்த காட்டுவேன். நான் கண்ணாடி மாதிரி” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல் அவரது மனைவி பிரீத்தி, “என் புருஷன நான் இங்க ரசிக்குற மாதிரியே அங்கயும் ரசிக்கணும்னு நெனைக்கிறேன். ஆனா எப்படி தலையெழுத்து மாறப்போகுதோ தெரியல” என குறிப்பிட்டிருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.