வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது விஜய் தற்போது சூப்பர் ஸ்டார் என்று நடிகர் சரத்குமார் கூறியது பெரும் வைரலாக பரவிய நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு சரத்குமார் கோபமாக பதில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் முக்கியமானவர் சரத்குமார். வில்லனாக அறிமுகமாகி பிறகு நாயகான நாட்டாமை, நட்புக்காக, சூர்யவம்சம் உள்ளிட்ட ஏராளமான வெள்ளிவிழா படங்களை கொடுத்துள்ளார். தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அந்த வகையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார்.
இதனிடையே கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற வாரிசு படத்தின இசைவெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார், சூர்யவம்சம் படத்தின் வெற்றி விழாவில் விஜய் தான் அடுத்து சூப்பர்ஸ்டார் என்று சொன்னேன். அது இப்போது நடந்துவிட்டது. நான் சொன்னது நடந்தது எனக்கு மிகவும் சந்தோஷம் என்று கூறியிருந்தார். சரத்குமாரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாக பரவியது.
இந்நிலையில், வாரிசு படம் வசூல் செய்துள்ளது தொடர்பாக படக்குழுவினருக்கு விஜய் சென்னை இ.சி.ஆர்-ல், உள்ள நட்சத்திர விடுதியில் விருந்து வைத்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் தயாரிப்பார் தில் ராஜூ இயக்குனர் வம்சி நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த சரத்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, ரஜினிகாந்த் இருக்கும்போது விஜய் சூப்பர் ஸ்டார் என்று சொன்னதற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த சரத்குமார், என் பையனுக்கு நான் தான் சூப்பர் ஸ்டார். எனக்கு எங்க அப்பா சூப்பர் ஸ்டார். விஜய் சூப்பர் ஸ்டார் என்றுதான் சொன்னேன். அடுத்த முதல்வர் ஆவார் என்றோ, பிரதமர் ஆவார் என்றோ சொல்லவில்லை. இதனை பிரச்னையாக்காதீர்கள்'' என கூறினார்.
அப்போது குறுக்கிட்ட ஒரு பத்திரிகையாளர், ரஜினிகாந்த் இருக்கும்போது எப்படி விஜய்யை சூப்பர் ஸ்டார் என கேட்க, திடீரென கொந்தளித்த சரத்குமார், ''நான் சுப்ரீம் ஸ்டார். சூப்பர் ஸ்டார் பெருசா, சுப்ரீம் ஸ்டார் பெருசா, அல்டிமேட் ஸ்டார் பெருசா, மெகா ஸ்டார் பெருசா. எனவே இதனை பிரச்னையாக்காதீர்கள். மீண்டும், சுப்ரீம் ஸ்டார் என்ற பட்டத்தை மற்றவர்களுக்கு சொல்லலாமா என கேள்வி எழுப்ப, அதற்கு அவர், நான் சந்தோஷப்படுவேன் சார்.
விஜய் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் என சொல்லவில்லை. அறிவுள்ளவன் நான். படித்தவன்'' நாட்டில் எத்தனையோ பிரச்சினை இருக்கு. மக்களுக்கு வரும் பிரச்சினை குறித்து பேசாமல் இந்த விஷயத்தை பெரிதாக பேசுகிறீர்கள் என்று ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/