Advertisment

வெப் சீரிஸில் சரத்குமார், ஏ.எல். விஜய்: அட, இங்கேயும் வந்துட்டாங்களா!

Tamil Entertainment Update : தமிழ் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும்ஒடிடி தளத்தில் வெளியாகும் வெப் சிரீஸில் நடிக்க தொடங்கி விட்டனர்

author-image
WebDesk
New Update
வெப் சீரிஸில் சரத்குமார், ஏ.எல். விஜய்: அட, இங்கேயும் வந்துட்டாங்களா!

Tamil Web series Update : வளரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சினிமாத்துறை டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் காரணமாக சீரியல்கள் திரைப்படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள், அனைத்து ரசிகர்கள் தங்களது கையில் உள்ள மொபைல் போனிலேயே அனைத்தையும் பார்த்துக்கொள்ளும் வசதி உள்ளது. இதனால் சினிமா ரசிகர்கள் உள்ளூர் படங்கள் மட்டும்ல்லாது உலகப்படங்களையும் எளிமையாக வழியில் கண்டு ரசித்து வருகின்றனர்.

Advertisment

அதிலும் தற்போது உலகையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின்போது திரைப்படங்கள் எதும் தியேட்டரில் வெளியாக தடை வதிக்கப்பட்டதால், ஒரு சில படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகின. அப்போதில் இருந்து ஒடிடி தளங்களுக்கான வரவேற்பு பெருகி வருகிறது. இதில் திரைப்படங்கள் மட்டுமல்லாது வெப் சிரீஸ் அதிகளவில் ஒடிடி தளங்களில் வெளியாகி வருகிறது.

ரசிகர்கள் பலரும் திரைப்படங்களுக்கு கொடுக்கும் ஆதரவை விட வெப் சிரீஸ்க்கு அதிகளவில் ஆதரவு அளித்து வருகினறனர். இதன் காரணமாக தமிழ் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும்ஒடிடி தளத்தில் வெளியாகும் வெப் சிரீஸில் நடிக்க தொடங்கி விட்டனர். அந்த வகையில் தமன்னா நடித்த நவம்பர் ஸ்டோரி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிலெட் மணி, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில், குயின், சமந்தா நடிப்பில் தி ஃபேமிலி மேன் 2 உள்ளிட்ட வெப் சிரீஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குநர் ஏ.எல்.விஜயின் புதிய வெப் தொடர் :  

இதன் காரணமாக பல திரையுலக பிரபலங்கள் வெப் சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகினறனர். அந்த வகையில் தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய் ஒரு புதிய வெப் சீரிஸ் இயக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இன்னும் பெயரிடப்படாத இந்த வெப் சிரீஸில், "பசங்க" புகழ் ஸ்ரீராம் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தட்டுநோம் தூக்குறோம், நான் சிரித்தால், பள்ளி பருவத்தில் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் கல்கோனா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் லக்ஷ்மி படத்தில் பணியாற்றிய குழந்தை நடிகை தித்யா பாண்டே இந்த வெப் சிரீஸில் கதாநாயகியாக நடிக்கிறார்.

வெப் சிரீஸில் என்ட்ரி ஆன சரத்குமார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார் பரம்பரை என்ற தொடரின் மூலம் வெப் சிரீஸில் என்ட்ரி கொடுக்க உள்ளார். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் இந்த வெப் சிரீஸில், ஜெகபதி பாபு சரத்குமாருடன் இணைந்து நடிக்க உளளார். 'பாகுபலி' படத்தை தயாரித்த ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி இந்த வெப் சிரீஸை தயாரித்துள்ளனர்.

பரம்பரா என்பது டேவிட் வெர்சஸ் கோலியாத் கதையாகும், நாயுடு குடும்பத்தின் மூத்த தலைவரான நாயுடுவுக்கும் அவரது சகோதரர் மோகன் ராவுக்கும் பிரிக்க முடியாத அன்பு உள்ளது. ஆனால் மோகன்ராவின் மகன் கோபி, மோகன்ராவை அன்பு என்ற போர்வையில் ஒடுக்கி வந்த நாயுடுவின் உணமையான முகத்தை மக்களுக்கு காட்டுபதற்காக முடிவு செய்கிறார். இதனால நாயுடு வீட்டிற்குள் பிரச்சனை உருவாகிறது அதன்பிறகு என்ன நடந்தது என்பது இந்த கதையின் கரு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sarath Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment