தமிழில் கடந்த 1988-ம் ஆண்டு வெளியான கண்சிமிட்டும் நேரம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் சரத்குமார். தொடக்கத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த அவரை தனது புலன் விசாரணை படத்தின் மூலம் வில்லனாக அறிமுகப்படுத்தியவர் விஜயகாந்த். அதன்பிறகு வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த சரத்குமார் 1991-ம் ஆண்டு வெளியான சேரன் பாண்டியன் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானர்.
இந்த படம் அவருக்கு பெரும் வெற்றியை கொடுத்ததை தொடர்ந்து அடுத்து சூரியன், நாட்டாமை, நட்புக்காக, சூரியவம்சம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்து தயாரிப்பாளர்களின் மினிமம் கேரண்டி நாயகனாக உருவெடுத்தார். ஒரு கடத்தில் நாயகன் வாய்ப்பு குறைந்ததை தொடர்ந்து கேரக்டர் நடிகராக மாறிய சரத்குமார், சரியாக வரவேற்பை பெற்றாத நிலையில், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் போர் தொழில் போன்ற படங்கள் சரத்குமாரின் 2-வது இன்னிங்சை தொடங்கி வைத்துள்ளது.
தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கும் சரத்குமார் தான் மீண்டும் ஹீரோவாக நடிக்க ஆயத்தமாகி வருகிறார். கடந்த 1984-ம் ஆண்டு சாயா தேவி என்பவரை திருமணம் செய்துகொண்ட சரத்குமார் கடந்த 2000-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு பிறந்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து 2001-ம் ஆண்டு ராதிகாவை சரத்குமார் திருமணம் செய்துகொண்டார். விவாகரத்து பெற்ற சாயா தேவி தற்போது தனது மகள் வரலட்சுமியுடன் வசித்து வருகிறார்.
இதனிடையே தற்போது அவர் விவாகரத்தான பல பெண்களுக்கு பிரச்சனையை எதிர்கொள்ள ஆலோசனை வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சமீபத்தில் பேசியுள்ள அவர், நாங்கள் விவாகரத்து பெற்று பிரியும்போது வரலட்சுமி சிறு குழந்தை. அவருக்கு அம்மா வேண்டுமா அல்லது அப்பா வேண்டுமா என்று கேட்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு குழந்தைக்கு தாய் தந்தை இருவரும் முக்கியம் தான்.
அதே சமயம் விவாகரத்து பெற்ற பெண்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். நானும் அந்த பிரச்சனைகளை கடந்து வந்தவள் தான் என்பதால் தற்போது சேவ் சக்தி அறக்கட்டளை மூலம் பெண்களுக்கு உதவி செய்து வருகிறேன். இந்த அறக்கட்டளையை எனது மகள் வரலட்சுமி தான் தொடங்கினார் என்று சாயா தேவி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“