எந்த கேரக்டராக இருந்தாலும் மக்கள் மத்தியில் பேசப்படும் கேரக்டராக இருந்தால் அங்கு நீங்கள் தான் ஹீரோ என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து தற்போது முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் சரத்குமார். பல ஆண்டுகளாக தமிழ்த் திரைத்துறையில் முன்னணி ஹீரோவாக பெரும் புகழைப் பெற்ற சரத்குமார், கடந்த தசாப்தத்தில் தனது ஹீரோ இமேஜில் இருந்து பின்வாங்கு முடிவு செய்தார். அவரது சமகால நடிகர்கள் போன்று முன்னணி கேரக்டர்களை தொடர்வதற்குப் பதிலாக, முக்கிய கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார்.
இதுவே அவரது வாழ்வின் 2-வது இன்னிங்சை வெற்றிகரமாக நடத்த ஒரு திருப்புமுணையாக அமைந்துள்ளது. அவருடன் நடித்த சக நடிகர்கள் தற்போது திரைத்துறையில் இருந்து பின்வாங்கிவிட்ட நிலையில் சரத்குமார் முக்கிய கேரக்டர்களில் நடித்து தனது பயணத்தை முன்னோக்கி நகர்த்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இளம் நடிகர் அசோக் செல்வனுடன் இணைந்து சரத்குமார் நடித்துள்ள படம் போர் தொழில்.
இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், டிரெய்லரில் சரத்குமாரின் அமைதியான நடிப்பு, படத்தின் கதைக்களம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் குறித்து பேசிய நடிகர் சரத்குமார் கூறுகையில், சினிமாவில் ஒரு செயல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாறுபடும் என்று நான் நினைக்கிறேன். பல வருடங்கள் ஹீரோவாக நடித்த சிலர் ஒரு கட்டத்தில் மற்ற கேரக்டர்களில் நடிக்கும்போது தாழ்புமனப்பான்மையுடன் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஆனால் நான் ஒரு சப்ஜெக்ட்டின் ஹீரோவாக இருக்க விரும்புவதால், அவர்களில் இருந்து வேறுபடுகிறேன். ஒரு படத்தில் நல்ல கேரக்டரில் நடித்து என்னைப் பாராட்டினால், நான் அந்தப் படத்தின் ஹீரோவாகி விடுவேன். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டரில் நீங்கள் நன்றாக செய்யும்போது, நீங்கள் கவனிக்கப்படுவீர்கள். மிதிவண்டியில் மிதியடியாக இருப்பதை விட சுழலும் சக்கரத்தின் அச்சாக இருப்பது நல்லது. அப்போதூன் மிதி மேலும் கீழும் சென்றாலும், நாம் சுழன்று கொண்டே இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து தனது தந்தை குறித்து பேசிய சரத்குமார், “என் தந்தை என்னை ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் சேர்த்தார். ஆனால் ஒரு சில நாட்களில், அமைச்சராக இருக்கும் எனது மைத்துனர், இந்த தொழிலில் இடமாற்றம் தவிர்க்க முடியாதது மற்றும் நிச்சயமற்றது என்பதை என்னிடம் கூறினார். அதனால், வியாபாரத்தில் இறங்கினேன். அதனால்தான் எனது முதல் தமிழ்ப் படமான கண் சிமிட்டும் நேரம் (1988), படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக நடித்தேன்.
30 க்கும் மேற்பட்ட படங்களில் போலீஸ்காரராக நடித்திருந்தாலும், போர் தோழில் படம் எனது யதார்த்தத்திற்கு நெருக்கமாக இருப்பதாக உணர்கிறேன். இந்த படம் ஒரு உண்மையான குற்றத்தை விசாரிக்கும் உணர்வை எனக்கு அளித்தது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.