Advertisment

150 வயது வரை வாழும் ரகசியம்... உதயநிதியை கலாய்க்கும் சரத்குமார்?

தீர்மான விளக்க கூட்டத்தில் உங்கள் நாட்டாமை முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். இது குறித்து 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தெரியவரும்

author-image
WebDesk
New Update
Sarathkumar

நடிகர் சரத்குமார்

நான் 150 வயது வரை வாழ வித்தைகளை கற்றுக்கொண்டுள்ளேன். அடுத்த சட்டசபை தேர்தலில் என்னை முதல்வர் ஆக்கினால் அந்த வித்தையை உங்களுக்கும் கற்றுக்கொடுப்பேன் என்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான சரத்குமார் தெரிவித்துள்ளார்.  

Advertisment

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டம் மதுரை பழங்காநத்தம் சுற்றுச்சாலையில் நடைபெற்றது. தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்க கூட்டம் நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்,

தீர்மான விளக்க கூட்டத்தில் உங்கள் நாட்டாமை முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். இது குறித்து 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தெரியவரும். மது உடல் ஆற்றலை இழக்க செய்து மனதில் அழுத்தததை உண்டாக்கி வருகிறது. பல்வேறு போதை பொருட்கள் இன்று கஞ்சா குட்கா என பல வகைகளில் உருவெடுத்துள்ளது. அதனை கட்டுப்படுத்தும் பணியும் தரமாக நடைபெற்று வருகிறது.

2025-ம் ஆண்டு இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக உருவாகும். ஆனால் இந்த நிலையை மாற்றி இளைஞர்களின் மூளையை மழுங்கடிக்க செய்யும் வகையில் வெளிநாடு சதி செய்கிறது. தற்போது எனக்கு 69 வயது ஆகிறது. ஆனாலும் நான் 25 வயது இளைஞரை போல் இருக்கிறேன். இன்னும் 150 வயது வரை உயிருடன் இருப்பேன். இதற்கான வித்தையை கற்று உள்ளேன். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் முதல்வராக்கினால் அந்த வித்தையை உங்களுக்கு சொல்லித் தருகிறேன்

2026 ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சி ஆட்சியில் அமரும் போது மது ஒழிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனிடையே ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை சொல்வேன் என உதயநிதி கூறியதை கேலி செய்யும் விதமாக சரத்குமார் இப்படி பேசியதாக இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment