scorecardresearch

இந்த விஷயத்தில் விஜயகாந்த் எங்களுக்கு தொல்லைதான் : சத்யராஜ் சொன்ன சீக்ரெட்

தொடக்கத்தில் பல வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகரான உயர்ந்த விஜயகாந்த் தயாரிப்பாளராகவும், விருதகிரி என்ற படத்தை இயக்கி ஒரு இயக்குனராகவும் முத்திரை பதித்தவர்.

இந்த விஷயத்தில் விஜயகாந்த் எங்களுக்கு தொல்லைதான் : சத்யராஜ் சொன்ன சீக்ரெட்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், அரசியலில் குறுகிய காலத்தில் முத்திரை பதித்தவர் என்று பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த். 1979-ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விஜயகாந்த், சட்டம் ஒரு இருட்டறை, நீதி பிழைத்தது, ஈட்டி, நூறாவது நாள் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

தொடக்கத்தில் பல வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகரான உயர்ந்த விஜயகாந்த் தயாரிப்பாளராகவும், விருதகிரி என்ற படத்தை இயக்கி ஒரு இயக்குனராகவும் முத்திரை பதித்தவர். மேலும் ஜெயலலிதா கருணாநிதி என இரண்டு அரசியல் ஆளுமைகள் இருந்த காலகட்டத்தில் தனியாக அரசியல் கட்சி தொடங்கி குறுகிய காலத்தில் எதிர்கட்சி தலைவராக உயர்ந்தவர் விஜயகாந்த்.

தான் நடிகராக இருந்த காலகட்டத்திலும், அரசியலில் இருந்து காலட்டத்திலும் ஏராளமாக உதவிகளை செய்துள்ள விஜய்காந்த், படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கு சமமான உணவு வழக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்தவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் மேலும் நண்பர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர், உதவி என்று யார் கேட்டாலும் அனைவருக்கு உதவுபவர் என்று அவருடன் இருந்த பலரும் கூறியுள்ளனர்.

தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசியலில் இருந்து விலகியுள்ள விஜயகாந்த் ஓய்வில் இருந்து வருகிறார். ஆனாலும் தினமும் அவர் பற்றிய தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அவருடன் திரைத்துறையில் இருந்த நண்பர்கள் பலரும் அவர் செய்த நன்மைகள் குறித்து அவ்வப்போது பேசி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சத்யராஜ் விஜயகாந்த் குறித்து பல தகவல்களை பேசியுள்ளர்.

மக்களுக்கு அள்ளி கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அதை எங்களுக்கு சொல்லி கொடுத்தவர் விஜயகாந்த். அவர் இப்படி அனைவருக்கும் உதவி செய்வதற்கு முக்கிய காரணம் அவரது மனைவி தான். விஜயகாந்த் எது செய்தாலும் அதற்கு உறுதுணையாக இருந்துள்ளார். அதேபோல் நன்கொடை அளிப்பதில் அவர் தான் அதிகமாக கொடுப்பார். அதை பார்த்து தான் நாங்கள் கொடுப்போம். அதேபோல் அவரால் தான் எங்களுக்கு தொல்லையும் வரும். படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் அவது அசால்டாக சுவர் மீது ஏறி அடித்துவிட்டு போய்விடுவார். ஆனால் அதையே எங்களையும் செய்ய சொல்வார்கள். அவர் தைரியசாலி செய்வார் நம்மாள முடியுமா?

எனது வள்ளல் படம் ப்ரீவியூ ஷோ பிரேமலதா பார்த்தார்கள். அந்த படத்தை பற்றி விஜயகாந்திடம் கூறியுள்ளார். அப்போது வள்ளல் படம் வெளியாவதில் சிக்கல் இருந்தது. இதை கேள்விப்பட்ட விஜயகாந்த் விடியற்காலை 6 மணிக்கு எனக்கு போன் செய்து வள்ளல் படத்துல என்ன பிரச்சினை நான் அங்க வரேன் வாங்க என்ன பிரச்சினை இருந்தாலும் தீர்த்துவிடலாம் என்று சொன்னார். அவரது படத்திற்கு தான் வள்ளல என்று பெயர் வைத்திருக்க வேண்டும்.

அதேபோல் இலங்கை தமிழருக்காக திரைத்துறையில் இருந்து முதல் ஆளாக நன்கொடை வசூலித்தவர் விஜயகாந்த் தான். முதுமலையில் ஈட்டி படத்தின் ஷூட்டிங்கின்போது யானை என்னை துரத்த வேண்டும். அப்போது விஜயகாந்த் என்னை காப்பாற்ற வேண்டும். ஆனால் அந்த சீன் எடுக்கும்போது யானை என்னை துரத்தவில்லை. அதற்கு விஜய்காந்த் ஒரு ஐடியா கொடுத்தார்.

சத்யராஜ் கையில் வெல்லம் எடுத்துக்கொண்டு யானையிடம் காட்டுங்கள் யானைக்கு வெல்லம் மிகவும் பிடிக்கும். அதன்பிறகு வெல்லத்தை எடுத்துக்கொண்டு ஓடுங்கள் யானை உங்களை துரத்தும். அப்போது பாதி வழியில் வெல்லத்தை தூக்கி வீசிவிடுங்கள் யானை போய்விடும் என்று சொன்னார்.

அதற்கு நான் இல்ல விஜி நான் வெல்லத்தை தூக்கி போட்டாலும் அது யானைக்கு தெரியாமல் வெல்லம் என்னிடம் இருப்பது போல் யானை என்னை துரத்தினால் என்ன செய்வது என்று கேட்டேன். அதை கேட்டு விஜய்காந்த் விழுந்து விழுந்து சிரித்தார். என்று பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்ட சத்யராஜ், தனக்கு நடிகராக வாய்ப்பு இல்லை நான் இயக்குனராக மாற போகிறேன் எனக்காக கால்ஷீட் கொடுங்கள் என்று சொன்ன உடனே யோசிக்காமல் ஓகே என்று சொன்னதாக கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actor sathyaraj say about vijayakanth innocent in tamil