Advertisment

தி.நகர் ஷாப்பிங் காம்ப்ளக்சில் தீ... மனைவியுடன் சிக்கிய சீரியல் நடிகர்: தப்பியது எப்படி?

Suntv serial actor Shreekumar, his wife Shamitha and other family members trapped in fire accident at Chennai Pondy Bazaar T. Nagar Tamil News: சென்னை வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் தனது குடும்பத்தாருடன் சிக்கிக்கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

author-image
WebDesk
New Update
tamil actor shreekuma met fire accident in Chennai

serial actor Shreekumar Tamil News: பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் மற்றும் குடும்பத்தினர் சென்னையில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் எப்படி உயிர் பிழைத்தனர் என்று நடிகர் ஸ்ரீகுமார் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

Advertisment

பாண்டிபஜாரில் தீ விபத்து

சென்னை தியாகராய நகர் பாண்டிபஜாரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நேற்று ஞாயிற்றுகிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 70க்கு மேற்பட்டோர் சிக்கி இருப்பதாகவும், வணிக வளாகத்தின் மொட்டை மாடியில் இருந்தபடி மக்கள் அலறி வருவதாகவும், அவர்களை உடனே மீட்க வேண்டும் என்றும், அப்பகுதியைச் மக்கள் தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

publive-image

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் அணைத்தனர். மேலும், மொட்டை மாடியில் சிக்கிய அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

publive-image

இந்த தீ விபத்து ஏற்பட என்ன காரணம்? என்பது குறித்த முழுமையான தகவல் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், மளமளவென பற்றி எறிந்த தீயால் வணிக வளாகத்திற்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தில் சிக்கிக்கொண்ட நடிகர் ஸ்ரீகுமார்

பாண்டிபஜாரில் நேற்று காலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், இதில் பிரபல சீரியல் நடிகர் "ஸ்ரீகுமார்" சிக்கிக்கொண்டார் என்கிற செய்தி வெளியாகி சீரியல் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

publive-image

பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியல் மூலம் சின்னத்திரையில் ஒரு நடிகராக அறிமுகமானவர். பிரபல இசையமைப்பாளரான ஷங்கர் கணேஷின் மகனான இவர் ஆனந்தம் சீரியலைத் தொடர்ந்து அஹல்யா, பந்தம், பொம்மலாட்டம், யாரடி மோஹினி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். அதோடு இவர், பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார்.

publive-image

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன், கலைஞர் டிவியின் மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் ஸ்ரீகுமார் தற்போது ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, வானத்தைப்போல போன்ற சீரியல்களில் நடித்துவருகிறார். மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

publive-image

இந்த நிலையில் தான் நடிகர் ஸ்ரீகுமார் சென்னை பாண்டிபஜாரில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறார். இந்த விபத்தின்போது ஸ்ரீகுமார் அவரது குடும்பத்தாருடன் அங்கு சென்றிருக்கிறார். அவரையும், அவருடன் விபத்தில் இருந்த மக்களையும் தீயணைப்புதுறையைச் வீரர்கள் பத்திரமாக மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

publive-image

இது எனக்கு 2வது வாழ்க்கை…

publive-image

இந்த நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள நடிகர் ஸ்ரீகுமார், “இது எனக்கு 2வது வாழ்க்கை தான், இந்த மாதிரி அசம்பாவிதம் நடந்த பிறகுதான் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுகிறது. தீவிபத்தில் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் உண்டாகவில்லை. ஆனால் புகையால் கண் எரிச்சல் உண்டானது. நாங்கள் ஒரு 30 பேர் இருந்தோம், அனைவருமே மாடிக்கு சென்றுவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Entertainment News Tamil Tamilnadu Fire Accident Suntv Serial Vanathai Pola Serial Suntv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment