/tamil-ie/media/media_files/uploads/2022/03/Simbu-Card.jpg)
Actor Simbu Car Accident Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்புவின் இனோவா கார் விபத்தில் சிக்கியதில் மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர், பாடகர் இசையமைப்பாளர் என பண்முக திறமைகொண்ட டி.ராஜேந்தர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது பேத்திக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மீண்டும் தனது காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது காரை அவர டிரைவர் செல்வம் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது
இந்நிலையில், இவர்கள் பயணித்த .இனோவா கார், தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே வந்தபோது, மாற்றுத்திறனாளி ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்து அறிந்த டி.ராஜேந்தர் உடனடியாக காரை விட்டு இறங்கி, 108 ஆம்புலன்ஸ்க்கு கால் செய்து காயமடைந்த மாற்றுத்திறனாளியை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல உதவியுள்ளார்.
அதன்பிறகு தனது வீட்டிற்கு போன் செய்து வேறொரு காரை வரவழைத்து டி.ராஜேந்தர் தனது பேத்தியுடன் வீடு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விபத்தில் காயமடைந்தவர் பெயர் முனுசாமி என்பதும், அவர் சக்கர நாற்காலி உதவியுடன் சாலையில் ஊர்ந்து செல்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சென்னை ராஜூகாந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முனுசாமி சிகச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்தியதால் மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக டி.ராஜேந்தரின் டிரைவர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விபத்தின் போது நடந்த நிகழ்வுகள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் முனுசாமி ஒரு மாற்றுத்திறனாளி என்பதும், நடுரோட்டில் ஊர்ந்து செல்வதும் சிசிடிவி காட்சிகளில் தெளிவாக தெரிகிறது, அவர் ஊர்ந்து சென்றதால், டிரைவர் செல்வம் அதை கவனிக்க தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.